.

Monday, May 2, 2016

அண்ணாச்சிக்கு அஞ்சலி
                                       
               
கடலூர் மாவட்ட NFTE சங்கத்தின் பலம்
ஆணி வேர், தோழர் சிரிலின் சீடன்,
எல்லோராலும் அண்ணாச்சி என்றும் 
DR என்றும்அன்புடன் அழைத்த 

தொழிற்சங்க வழிகாட்டி
தோழர் கடலூர் D ரங்கநாதன்
இன்று மே 2 ம் நாள் முற்பகல் இயற்கை எய்தினார் என்பதைக்
கண்ணீர் மல்க அறிவிக்கிறோம்.

                            பனி போர்த்திய இமையமென வெள்ளுடை தரித்த கருணைச் செங்குன்று!
                            கோட்டமில்லாத நேரிய கொள்கைச் சிங்கம்!
                            அவர் பார்த்துப் பார்த்து கட்டிய கடலூர் கோட்ட சங்கம்அதன்
                            உறுப்பினர்கள் அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் பெருக்கம்!

அண்ணாச்சி நேர் பார்த்து கட்டி அமைத்த தந்திதொலைபேசி கம்பிப் பாதைகள், தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறிப் போயிருக்கலாம். ஆனால், அவர் கட்டி வளர்த்த கொள்கை வீரர்கள் உண்டுஅண்ணாச்சி போற்றிய
கொள்கையை மேல் எடுத்துச் செல்ல!

மறைந்த நம் தலைவருக்கு
 செங்கொடி தாழ்த்தி புகழ் அஞ்சலி செலுத்துவோம்!
அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நம் பரிவை உரித்தாக்குவோம்!

                                                                                                                                                  கண்ணீரோடு,
                                                                                                    கடலூர் NFTE மாவட்டச் சங்கம்
                                                   ----------------------------------
குறிப்பு: அன்னரின் இறுதி ஊர்வலம் நாளை செவ்வாய் கிழமை03-05-2016 அன்று
காலை 10:00 மணியளவில் அவரது  சொந்த ஊரான B.முட்லூர் அருகிலுள்ள கணக்கன்பாளையம் கிராமத்திலிருந்து புறப்படும்

(கடலுர் மார்க்கத்திலிருந்து B.முட்லூர் கடைசி பேருந்து நிறுத்தம் ,


சிதம்பரம் மார்க்கத்திலிருந்து B.முட்லூர் முதல்  பேருந்து நிறுத்தம்)





Add caption

              



No comments:

Post a Comment