.

Friday, July 1, 2016

மாற்றுவோம் டெலாய்ட் கமிட்டி முடிவை 
   டெலாய்ட் கமிட்டி பரிந்துரையின்படி Business Area-க்களை ஒருங்கி ணைப்பதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நமது கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தை புதுவை தொலைத்தொடர்பு மாவட்டத்துடன் இணைக்கப்படவுள்ளது. கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டம் இரண்டு மிகப்பெரிய வருவாய் மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைக்கொண்டது ( சுமார் 10,872 சதுர கி.மீ). மேலும் கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டம் ஆண்டிற்கு 100 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டிவருகிறது. இந்தியாவில் டெலாய்ட்டி கமிட்டி பரிந்துரையின்படி பெரிய மாவட்டங்களுடன் தான் சிறிய மாவட்டம் இணைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக புதிய டெலாய்ட்டி கமிட்டி அறிக்கைபோல் தோன்றுகிறது.
கடலூர் மாவட்ட சங்கம் தனது எதிர்ப்பினை பதிவு செய்கிறது.
    இப்பிரச்சனையில் ஒருமித்த கருத்து உருவாக்குவதற்கு அனைத்து சங்கங்களுடன் கலந்தாலோசனை செய்வது என்று முடிவு செய்துள்ளது. நமது மத்திய, மாநில சங்கங்கள் நமது கருத்தினை ஏற்று கடலூரை தனி Business Area-வாக மாற்ற முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளது. புதுச்சேரி தனி மாநிலமாக இருப்பதால் அதனை தனி Business Area-வாக உருவாக்குவதில் எவ்விதமான ஆட்சேபனை இல்லை.

No comments:

Post a Comment