செப்டம்பர்-2
பொது
வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக்கூட்டம்
செப்டம்பர்-2
பொது வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக்கூட்டங்களை கடலூர் மாவட்டத்தில்
BSNLEU சங்கத்துடன் கூட்டாக நடத்துவது என
முடிவெடுக்கப்பட்டு அதனடிப்படையில் 24.08.2016 புதன்கிழமை தொடங்கி பல்வேறு கிளைகளில்
நடைபெற்றது.
24.08.2016 காலை சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி
நிலையத்தில் நமது மாநில துணைத்தலைவர் தோழர்.வீ.லோகநாதன், மாநில அமைப்பு செயலர்
தோழர் P.பாலமுருகன் மற்றும் BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை,BSNLEU மாவட்ட செயலர் தோழர் KT.சம்மந்தம் ஆகியோர் பொது வேலைநிறுத்த கோரிக்கைகளை
விளக்கி சிறப்புரையாற்றினர். கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் துவக்க
உரையாற்றினார்.
24.08.2016 மதிய உணவு இடைவேளையில் நெய்வேலியிலும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை
விருத்தாசலத்தில் நடைபெற்ற பொது வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டத்திலும் நமது
மாநில உதவிசெயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்
V.இளங்கோவன் மற்றும் BSNLEU சங்க மாநில மாநில
அமைப்பு செயலர் தோழர் M.முருகையா, மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை ஆகியோர் பொது
வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.
விருத்தாச்சலம்
நெய்வேலி
25.8.2016 காலை விழுப்புரத்திலும், மதியம் திண்டிவனத்திலும், அன்று மாலை
செஞ்சியிலும் நடைபெற்ற பொது வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் நமது மாநில
உதவிசெயலர் தோழர் P.சென்னகேசவன், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் N.அன்பழகன்,
மாவட்ட தலைவரும் TMTCLU மாநில பொதுச்செயலருமான தோழர் R.செல்வம் மற்றும் BSNLEU சங்க மாநில உதவிசெயலர் தோழர் R.V.ஜெயராமன்,
மாநில அமைப்பு செயலர் தோழர் முகமது ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு விளக்க
உரையாற்றினர்.
விழுப்புரம்
திண்டிவனம்
செஞ்சி
26.08.2016 காலை பண்ருட்டி, மதியம் உளுந்தூர்பேட்டை, மாலை கள்ளக்குறிச்சியில்
நடைபெற்ற வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக்
கூட்டத்தில் மாநில உதவிசெயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாநில சங்க சிறப்பு
அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் மற்றும் BSNLEU
சங்க மாநில மாநில அமைப்பு செயலர் தோழர் M.பாபு, மாநில துணைத்தலைவர் தோழர்
A.அண்ணாமலை ஆகியோர் பொது வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.
பண்ருட்டி
No comments:
Post a Comment