“1947 ஆகஸ்ட்
15
ம் நாள்
நமது புனித
நாட்டின் ஒற்றுமை
சீர்குலைக்கப்பட்டு பாக்கிஸ்தான்
பிரிந்தது. அதற்கு இரண்டு
நாட்களுக்கு முன்பு
டெல்லியின் கூடிய
தபால் தந்தி
ஊழியர்கள் UPTW என்ற புதிய சங்கத்தைத்
துவக்கி ஒற்றுமையை
உருவாக்கினர்.
இந்த
ஒற்றுமை முயற்சிக்கு
ஆக்கம் தந்தவர்
நமது மதிப்பிற்குரிய தலைவர் ஓம் பிரகாஷ்
குப்தா. இவரையே இந்த U P T
W சங்கத்தின் பொதுச்
செயலராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
இச்சங்கம்
தோன்றிய பிறகே
நமது தொழிலில்
தொழிற்சங்க விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. ஜனநாயக மரபுகள் வளர்க்கப்பட்டன. போராட்ட மனோபாவ வளர்ச்சியில்
தீவிர முன்னேற்றம்
கண்டோம்,
தோழர் டி.
ஞானையா
“ஒளிவீசும்
சம்மேளனம்” நூலில்
இந்த
ஒன்றுபட்ட UPTW சங்கமே
தோழர் குப்தா,
தாதா கோஷ்
இவர்களின் தொடர்
முயற்சியாலும் அன்றைய
காங்கிரஸ் அரசின்
மதிப்பு மிக்க
தலைவர்கள் ரபி
அகமத் கித்வாய்
மற்றும் பின்னர்
பாபு ஜெகஜீவன்
ராம் முதலானோர்
உதவியாலும் ஒன்றுபட்ட
உருக்கு போன்ற
சம்மேளனமாம் NFPTE பேரியக்கம்
1954
நவம்பர் 24 ல்
உதயமானது.
உதயமானது
முதலே அதன்
தாரக மந்திரம்
ஒற்றுமை, ஒற்றுமை மேலும் ஒற்றுமை
என்பதுதான். அதுதான்
அன்றும் இன்றும்
என்றும் நம்மை
வழி நடத்தும்
விடி வெள்ளி.
நமது
போராட்டங்களை வீழ்த்த
– நமது ஒற்றுமையைச்
சீர்குலைக்க—அதே
காங்கிரஸ் அரசு
போட்டி சங்கத்தை
உருவாக்கியது.
அடுத்து வந்த
அரசு தனது
கட்சி சங்கத்திற்கு
அங்கீகாரம் தந்தது, ஆனால் என்ன நடந்தது?
பிரச்சனை
என்று வந்தபோது
தோழர் குப்தா
திசைக்கொன்றான மூன்று
சம்மேளனங்களையும் ஒன்றாய்
ஒரே அணியில்
திரட்டினார்.
ஒற்றுமைக்கான தொடர்
போராட்டங்களை நடத்தினார்.
வெற்றியை அனைவருக்கும்
பொதுவாக்கினார்.
N F P T E பேரியக்கத்தின் சாதனைகள் ஒன்றா இரண்டா?
• அவை
எல்லாம் முன்மாதிரி
இல்லாத முதல்
மாதிரி.
• சங்கங்களை
உடைத்ததனால் நம்
சாதனைகள் நிற்கவில்லை.
• உயர்
பதவி இடங்கள்
காலி இல்லை
எனின் பதவி
உயர்வு இல்லை
என்ற தேக்கத்தை
உடைத்து இரண்டு
கட்ட பதவி
உயர்வு திட்டம்
கொண்டு வந்த
போது அத்தகைய
நடைமுறை மத்திய
அரசுத் துறை
எதிலும் இல்லாத
ஒன்று.
• அரசு
ஊழியர்களுக்கு போனஸா
என்று பகடி
செய்தவர்கள் நிமிர்ந்து
முகம் பார்க்க
முடியாதபடி ஆண்டு
தோறும் உயர்ந்து
வந்த உற்பத்தியோடு
இணைந்த போனஸ்
பெற்றுத் தந்தது
எங்கள் சங்கம்.
• நிரந்தர
ஊழியர்களின் கோரிக்கைகளை--அவர்களின் போராட்டங்களை--ப் பலவீனமாக்க
RTP
சுரண்டல் முறையை
கொண்டு வந்தது
அரசு. ஆனால் RTP ஊழியர்களுக்காக நிரந்தர ஊழியர்களைப் போராட
வைத்து அவர்களையும்
நிரந்தரமாக்கியது.
• பலம்
பொருந்திய மத்திய
அரசு ஆள்
எடுப்பு தடைச்
சட்டம் அமல்படுத்திய
நிலையில் ஒன்னரை
லட்சம் மஸ்தூர்
தோழர்களை நிரந்தரமாக்கியது N F P T E செங்கொடி.
• பன்னாட்டு
/ உள்நாட்டு தொலைத்தொடர்பு
முதலாளிகளுக்குப் பல்லக்குத்
தூக்க அரசுத்
துறை பொதுத்
துறையாக BSNL ஐ
உருவாக்கியது அரசு.
அரசு
கொள்கை நிலை
என்பதனால் கோட்டைவிடவில்லை எங்கள் சங்கம்.
அப்போதும்
ஒற்றுமையைக் கட்டி
– ஒரு சிலர்
ஓரம் கட்டிய
போதும்—போராட்டக்களம் கண்டது. பல லட்சம்
தோழர்களின் வியர்வையாலும்
ரத்தத்தாலும் உருவான
தொலைபேசித் துறையைப்
பொதுத் துறையான
பின்னும் மக்கள்
சேவையை உயர்த்திப்
பிடிக்க வைத்தது. தனியார் செல்பேசி கட்டணக்
கொள்ளையைத் தடுத்தது.
• உழைத்து
உதிரம் சிந்திய
தோழர்களின் எதிர்கால
பென்ஷனைக் காப்பாற்றிக்
கொடுத்தது எங்கள்
செங்கொடி சம்மேளனம்!
இன்றைய
புதிய தாக்குதல்கள்
எந்த வடிவில்
வந்தாலும் சரி—-
எங்கள்
கையாலேயே எங்கள்
கண்ணைக் குத்துவது
போல எங்கள்
செல்பேசி கோபுரங்களைத்
தனி டவர்
கம்பெனியாக உருவாக்கும்
சதியாலும் சரி--
எத்தனையோ
கருத்து மாறுபாடுகள்
கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் சரி
–-
எங்கள்
தியாகத் தலைவர்கள்
காட்டிய ஒப்பற்ற
ஒற்றுமைப் பாதை,
ஒற்றுமை
உணர்வு, போராடும் மனவலிமை எங்களுக்கு
உண்டு.
அதை
நாளும் எங்களுக்கு
ஊட்டி வரும்
சம்மேளனப் பதாகையை
உயர்த்திப்பிடிப்போம்!
சம்மேளன
தின நன்நாளில்
கிளைகளில்
எல்லாம் செங்கொடியை
வானளாவப்
பறக்க விடுவோம்!
தியாகத்
தலைவர்களை நினைவு
கூர்வோம்!
NFTE ஜிந்தாபாத்! Workers’ unity ஜிந்தாபாத்!
இன்குலாப்
ஜிந்தாபாத்!
No comments:
Post a Comment