தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு
டெலிகாம் டெக்னிசியன் கவுன்சிலிங்,
ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் மீது விரைவான தீர்வு கோரி 17.12.2016 அன்று தர்ணா போராட்டம் அறிவித்தோம். நிர்வாகம் நமது மாவட்ட சங்கத்தை 16-12-2016 காலை
பேச்சுவார்த்தைக்கு வரும்படி (
15-12-2016 ) மாலை அழைப்பு விடுத்தது.
அதன் அடிப்படையில் இன்று
காலை 11:30 மணியளவில் நிர்வாகத்தோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், மாவட்டத்
தலைவர் தோழர் R.செல்வம், மாவட்ட உதவிச்
செயலர் தோழர் D.குழந்தைநாதன்
அவர்களும் கலந்து கொண்டார்கள்.
பேச்சுவார்த்தையில் ஒரு
சுமூக தீர்வு எட்டப்பட்டதன் அடிப்படையில் நாளை நடைபெறவிருந்த தர்ணா போராட்டம்
ஒத்திவைக்கப்படுகிறது.
விபரம்:
v மங்களம்பேட்டையில் EOI டெண்டரில் உபரியென தவறுதலாக நிறுத்தப்பட்ட
தோழர் ஜீவானந்தம் அவர்களை உடனடியாக பணிக்கு எடுத்து கொள்வது, சிவில் பகுதி ஒப்பந்த
ஊழியர் தோழர் முருகன் அவர்களுக்கு
வழங்கப்படாத பல மாத ஊதியம் விரைவாக வழங்கிட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
v மாவட்ட ஆட்சியர்
நிர்ணயித்த தினக்கூலி ஊழியர்களுக்கான (01-04-2016
முதல்) புதிய ஊதியம் BSNLலில் பணிபுரியும் ஒப்பந்த
ஊழியர்களுக்கு அமுல்படுத்திட மாநில நிர்வாகத்திடமிருந்து உரிய அனுமதியை
பெற்று விரைவில் நடைமுறைபடுத்த உறுதியளித்துள்ளது.
v 01-10-2016 முதல் ஒப்பந்த
ஊழியர்களுக்கான VDA உயர்வு ரூ 4/- உயர்த்தி
வழங்க மாவட்ட நிர்வாகம் உத்திரவு பிறப்பித்துள்ளது.
v 01-01-2017 முதல் புதிய
டெண்டரில் ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை, 8.33% போனஸ் ( குறைந்தபட்ச போனஸ்
ரூ7000/-) முதலிய ஷரத்துக்களை ஒப்பந்தத்தில் சேர்க்கவும், அதனை கறாராக அமுல்படுத்தவும்
நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
v மற்றும் பிற ஒப்பந்த
ஊழியர் பிரச்சனை, நிரந்திர ஊழியர்களின் மாறுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் மீது
விரைவாக தீர்வு காணப்படும் என
நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
டெலிகாம் டெக்னிசியன் கவுன்சிலிங்
நிர்வாகம் பிற்பகலில் அனைத்து
சங்கங்களையும் அழைத்து TT (டெலிகாம் டெக்னிசியன்)
கவூன்சிலிங் பற்றி விவாதித்தது.
v 10-01-2017 அன்று
கவுன்சிலிங் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.
v கவுன்சிலிங் குறித்து
விபரமான இறுதி பட்டியல் 21-12-2016 அன்று இறுதி செய்யப்படும் என நிர்வாகம் உறுதி
அளித்துள்ளது.
நமது கோரிக்கைகளின் மீது ஏற்பட்ட
முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு நாளை நடைபெறவிருந்த தர்ணா போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
தர்ணாவில் திரளாகக் கலந்து கொள்ள
தயாரிப்புகளை செய்த கிளைச்
செயலர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
நிர்வாகத்திற்கு நமது நன்றி!!
No comments:
Post a Comment