.

Monday, March 29, 2021


தோழர் ரகு சில நினைவுகள் 
மறு பதிவு

தோழர் ரகு பவள விழா 
              6-5-2017

கடலூர் தொலைபேசி ஊழியர்கள் வேறு,
தோழர் ரகு வேறா?
ரகுதான் கடலூர்,
கடலூர்தான் ரகு!

அந்தத் தலைவனுக்கு
அகவை 75,
பவள விழா!

பவளவிழா காணும் தலைவா!
நூற்றாண்டு காண வாழ்த்துகிறோம்!
வாழி பல்லாண்டு!

நீ
ஓரிடம் நில்லாத
காற்று!

எங்கும் நிறைந்திருப்பாய்
இன்னல் உற்றோர்க்கு
இதம் தரும் தென்றலாய்!

போர்க் களத்தில்
புயற்காற்றாய்!

எதிரிகளிடத்தே
சண்ட மாருதமாய்!

அதிகார வர்க்கத்தைக்
கதிகலக்கும் சூறைக் காற்றாய்!

எங்கள் ஜீவனின்
உயிர்க் காற்றாய்!

NFTE  ஜிந்தாபாத்
விண்ணதிரும் முழக்கங்கள் --
எங்கள் காதுகளில்,

தியாகத் தலைவர்கள் ஜிந்தாபாத்!
தோழர் ரகு ஜிந்தாபாத்!”
என்றே அதிர்கிறது!

சேர்ந்து நாங்களும்
முழங்குவோம்,

 தலைவா வாழி!
 தோழா வாழி!
 வாழிய பல்லாண்டு,

 பல்லாயிரத்தாண்டு

தோழர் ரகு பணிஓய்வு பாராட்டு விழாவில் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட “விருட்சம்” பாராட்டு விழா மலரில் தோழர் ரகுவைப் பற்றி தலைவர்களின் கட்டுரை காண 
இங்கே சொடுக்கவும்....... 


கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில்

தோழர் ரகு....







NFTE, TMTCLU கடலூர் மாவட்ட சங்கங்கள்

No comments:

Post a Comment