.

Tuesday, June 20, 2017

நா காக்க
நா காக்க என்று பேருந்தில் எழுதி வைத்திருக்கிறீர்களே, அது ஓட்டுனருக்கா அல்லது நடத்துனருக்கா?”  -- கேட்டது,
அந்த நாள் சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர்

நா உள்ள எல்லோருக்கும்” – இது பதில்.  
சொன்னவர் அன்றைய தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா.

நாமும் அதைத்தான் நினைவூட்ட விரும்புகிறோம்
எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளால் அல்ல .  எனவே பணிவோடு வேண்டுகிறோம்
வேலி தாண்டிய வெள்ளாடாக வேண்டாம்.

நாவினால் சுட்ட வடு ஆறாது.  அப்படி ஆறாது இன்னும் பசுமையாக இருக்கிறது, பிதாமகன் குப்தாவைப் பற்றி, பந்தலில் ஜூஸ் கொடுத்த அஞ்சா நெஞ்சன் ஆர்.கே.-வைப் பற்றி, அறிவுஜீவி என்றெல்லாம்… …  … இப்படி எத்தனை எத்தனையோ. . . பசுமையாக . . .இன்று னீஸ்வரன் (Saturn)

ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம்கம்யூனிஸ்ட் என்னும் பூதம்இப்படித் துவங்குகிறது மாமேதை மார்க்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.

இன்றோ சிலரை Saturn (சனி) பிடித்து ஆட்டுகிறது,
பயம் தேவையில்லை, சனி எல்லோருக்கும் கெடுதல் செய்யாது. பொங்கு சனி என்பார்கள் நன்மை விளையும்போது
10 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்ட  (STR) RM தோழர்களுக்கு விடியல் பிறக்கட்டும்!  நன்மை கிடைக்கட்டும்!

சொந்த வீட்டில் யார் எந்த அறையில் இருப்பது,  உட்காருவது, . . . . . .
என்பதை எல்லாம் பக்கத்து வீட்டுக்காரர் நாட்டாண்மை செய்யலாமா?
வேண்டாம், வேலூரில் கட்டிய ஒற்றுமை பிம்பம் அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே,

நீரடித்து நீர் விலகாது, கோழி மிதித்துக் குஞ்சு சாகாது,

எதிர்காலக் கடமைகளிலிருந்து இயக்கத்தைத் திசை திருப்பல்

வேண்டாமே! கடமை பெரிதுண்டு!

1 comment:

  1. நாகரீகமான தலையங்கம் ....தொடரட்டும் ....தோழமையுடன் விஜய்

    ReplyDelete