கடலூர் தொலைபேசி கிளை பொதுக்குழு
கடலூர் தொலைபேசி கிளை பொதுக்குழுக்கூட்டம் 01.8.2017 மாலை 5.00 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலக
வளாகத்தில் தோழர் P.அன்பு தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயலர் தோழர் E.விநாயகமூர்த்தி
வரவேற்புரை நிகழ்த்தி பொதுக்குழுவை துவக்கிவைத்தார். கிளைத் தோழர்கள்
பெரும்பான்மையாக கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். தோழர்கள் V.இளங்கோவன்,
D.குழந்தைநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் பிரச்சனகளைத்
தொகுத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் தோழர் R.செல்வம், மாநிலத் துணைத்தலைவர்
தோழர் V.லோகநாதன் ஆகியொர் கலந்துகொண்டனர். தோழர் S.ரங்கநாதன் நன்றி தெரிவித்தார்.
கிளையில் ஓய்வுபெற்றத் தோழர்களுக்கு ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில்
பாரட்டு விழா நடத்துவது எனவும் அக்கூட்டத்திற்கு மாநிலச்செயலர் தோழர் K.நடராஜன் அவர்களை அழைப்பது எனவும்,
கிளையில் உள்ள பிரச்சனகளைத் தொகுத்து நிர்வாகத்திடம்
கொடுப்பது எனவும், அதன் பேரில் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பொறுத்து தொழிற்சங்க
நடவடிக்கை மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
கடலூர் தொலைபேசி ஊழியர் குடியிருப்பு பிரச்சனையில் உரிய
கவனம் செலுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment