கடலூர் தொலைபேசிக்கிளை கூட்டம்-23.8.2017
கடலூர் GM அலுவலக
வளாகத்தில் 23.8.2017 மாலை, பல்வேறு தருணங்களில் பணியிலிருந்து ஓய்வு பெற்றத்
தோழர், தோழியர்களுக்கு தொலைபேசிக்கிளை சார்பில் பணி ஓய்வு பாராட்டுகூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் P.அன்பு தலைமை தாங்கிட,
கிளைச்செயலர் தோழர் E.விநாயகமூர்த்தி வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மாநிலசங்க
சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் துவக்கவுரையாற்றினார். மாநில
துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன், மாவட்டத்தலைவர் தோழர் R.செல்வம், மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் A.C.முகுந்தன்,
மாவட்ட உதவிச்செயலர் தோழர் D.குழந்தைநாதன், GM அலுவலகச்செயலர் தோழர் S.இராஜேந்திரன்,
GM அலுவலக கிளைத்தலைவர் தோழர் K.சீனிவாசன் ஆகியோர் ஓய்வு
பெற்ற தோழர்களை பாராட்டி, வாழ்த்திப்பேசினர். மேலும் நமது கூட்டணி சங்கம் SEWA
சார்பில் அதன் மாவட்ட உதவி செயலர் தோழர் சுதாகர்ராஜ் வாழ்த்திப் பேசினார். மூத்தத்
தோழர்கள் S.தமிழ்மணி, V.நீலகண்டன், P.ஜெயராமன் உள்ளிட்டத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.
மேலும் நமது மாநிலச்செயலர் தோழர் K.நடராஜன் சிறப்புரையாற்றினார். பின்னர் பணிஓய்வு பெற்ற தோழர்களுக்கு கிளையின்
சார்பில் நினைவுப்பரிசுகள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நமது மாவட்ட செயலர்
தோழர் இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். பாராட்டு பெற்ற தோழியர் P.கமலா, தோழர் P.அய்யானாரப்பன் ஆகியோர் ஏற்புரையாற்றினர். தோழர் S.ரங்கநாதன்
நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment