நெய்வேலி கிளை மாநாடு 22-12-2017
கடலூர் மாவட்டம் நெய்வேலி கிளையின் மாநாடு 22-12-2017 அன்று வெற்றிகரமாக .தோழர் V.லோகநாதன் கிளை தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சம்மேளனக்கொடியை
தோழியர் விஜயலட்சுமி ஏற்றிவைத்தார். சம்மேளன செயலர் தோழர் G.ஜெயராமன் துவக்கவுரையாற்றினார்.. ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டு ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. உறுதுணையாக செயல்பட்ட முன்னாள்
கிளைச்செயலர் தோழர் E.அப்துல்லாவுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
தோழர் V.பழனிவேல், தோழர். K.ஜெய்சங்கர், தோழர். N.ஜெயசீலன் ஆகியோர் முறையே
தலைவர், செயலர், பொருளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி அனைத்து கிளைசெயலர்களும், மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரையாற்றினார்கள்.. மாவட்ட தலைவர் தோழர்.R.செல்வம், மற்றும் மாநில உதவி செயலர் P.சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். தோழர் P.மாயகிருஷ்ணன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது..
No comments:
Post a Comment