.

Saturday, March 3, 2018

NFTE-BSNL
தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
தொலைபேசியக கிளை, கடலூர்.


02-03-2018 அன்று  தொலைபேசியக கிளையின் பொதுக் குழு கூட்டம் தோழர் P.அன்பு தலைமையில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.   அதனை தொடர்ந்து கிளை  உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. கிளைச் செயலர் தோழர் E.விநாயகமூர்த்தி  சங்க செயல்பாடுகள் பற்றியும், பிரச்சனைகளின் தீர்வும் பற்றியும் கிளை  செயல்பாடுகளை பற்றியும் விளக்கி கூறினார்.  பின்னர் சிறப்புரையாக தோழர் V.இளங்கோவன் மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் நமது இலாக்கா  பற்றியும் எடுத்துரைத்தார்.
        இறுதியாக தோழர் R.கிருஷ்ணமூர்த்தி  பொதுக் குழு கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
        கூட்டத்திற்கு TMTCLU கடலூர் கிளைச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம், TMTCLU மாவட்ட செயலர் தோழர் A.S.குருபிரசாத்  ஆகியோர் பொதுக் கூட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்தனர். கூட்டத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
v 07-08-2017 அன்று கோட்ட பொறியாளரிடம் கொடுப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் ஒரு சில பிரச்சனைகளை தவிர பெரும்பாலன பிரச்ச்னைகள் தீரவில்லை. தேங்கியுள்ள பிரச்சனைகளை உடணடியாக தீர்க்க கோரி கோட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது, தேவை ஏற்படின் போராட்டம் நடத்துவது என்று பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.

v நமது கிளையின் மாநாடு  ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடத்துவது என்றும்,  சார்பளர் கட்டணம்  ரூ 200/- ஐ ஒவ்வொரு உறுப்பினரும் மாநாட்டிற்கு முன்கூட்டியே  கொடுக்க வேண்டும்  என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
v அகில இந்திய மாநாட்டிற்கு  தோழர்கள் V.ராஜீ JE,  A.C.முகுந்தன்TT,    V. இளங்கோவன்JE,  R.கிருஷ்ணமூர்த்திTT, R.பன்னீர்செல்வம்TT, P.குமார்TT ஆகியோர்  சார்பாளராக  கலந்து கொள்ள உள்ளனர். மேலும் வரவிருக்கும் தோழர்கள் கிளைசெயலரிடம்  தெரிவிக்கவும்  என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

v ஊழியர் மற்றும்  ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனைகளில் பாராபட்சம் இல்லாமல் கோட்ட நிர்வாகம் அனுக வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

  தோழமையுடன்
E.விநாயக மூர்த்தி
                                                                           கிளைச் செயலர், கடலூர்.




No comments:

Post a Comment