.

Friday, April 27, 2018

பணி ஓய்வு நாள் சிறக்க வாழ்த்துகிறோம்!!

30.04.2018 அன்று  ஓய்வு பெறும்

                திருமதி N.ஜெயந்திஅபர்ணா DGM(Admn), CFA

தோழர்கள்...

    • P.அரிச்சந்திரன் OS கடலூர்
    • V.மணிவேல் OS காட்டுமன்னார்கோயில்
    • P.கோதண்டபாணி OS நெய்வேலி -2
    • J.செந்தாமரை TT- கடலூர்
    • K.ராமன் TT- விருத்தாசலம்
    • T.செல்வராஜ் TT-பண்ருட்டி
    • S.ஹஜீர்சிங் TT-அம்மேரி
    • G.ராஜமாணிக்கம் TT- திண்டிவனம்
    • D.சேகர் TT- வளவனூர்
    • K.லஷ்மணன் TT-ஸ்ரீமுஷ்ணம்
    • தோழியர் A.ரோஜாமேரி TT-சிதம்பரம்
    • தோழியர் V.விஜயலஷ்மி AOS-நெய்வேலி டவுன்ஷிப் (VRS)


ஆகியோரின்
பணி ஓய்வுக்காலம் சிறக்க
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!! 




Thursday, April 26, 2018


BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL) கூட்டம் 24-04-2018 செவ்வாய்கிழமை அன்று புது டெல்லியில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு நமது NFTE-BSNL பேரியக்கத்தின் பொதுச் செயலர் தோழர் C.சந்தேஷ்வர்சிங் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில், NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA, FNTO,BSNLMS, BSNLATM மற்றும் BSNLOA  ஆகிய சங்கங்களின் பொதுச் செயலர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில்   19-04-2018 அன்று மாநில தலைநகரங்களில் நடைபெற்ற ஆளுநர் மாளிகை நோக்கிய பேரணி தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும்...! இவ் விவாதத்தில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திட பல மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்டது மற்றும் 3-வது ஊதிய மாற்றம் தொடர்பாக அனைத்து சங்க பிரதிநிதிகளின் தீவிர ஆலோசனை மற்றும் விவாதத்திற்கு பிறகு கீழ்க்கண்ட முடிவுகள்  எடுக்கப்பட்டது

BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின்
முடிவுகள் மற்றும் போராட்ட இயக்கங்கள்:-
தனி டவர் கம்பெனி (BSNL Tower Corporation Limited) அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும்., மத்திய அரசின் BSNL விரோதக் கொள்கைகளை எதிர்த்தும்.,
07-05-2018 முதல் 11-05-2018 வரை., 5 நாட்கள்.,
நாடு முழுவதும்., தெரு முனைப் பரப்புரை இயக்கம் நடத்துவது.
தெரு முனைப் பரப்புரை இயக்கத்தின் இறுதி நாளான 11-05-2018 அன்று
நாடு முழுவதும்., கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
மற்றும்...!
தனி டவர் கம்பெனி முடிவை எதிர்த்து பிரதம மந்திரிக்கு தொலைநகல் (Fax Messages)
கோரிக்கை மனு அனுப்புவது.
ஊதிய மாற்றம் தொடர்பாக., BSNL நட்டத்திலிருந்து (Affordability) விதிவிலக்குப் பெற மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என DPE (Department of Public Enterprises)  நிறுவனம் தனது 18-04-2018 கடிதம் மூலம் தொலைத்தொடர்பு துறை (DOT)-க்கு வழிகாட்டியுள்ளது. இது தொடர்பாக., மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சரை உடனடியாக சந்திப்பது என்றும்., மேலும்...! இந்த சந்திப்பின் போது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய பங்களிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை விவாதிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. தனி டவர் கம்பெனி தொடர்பாக 09-05-2018 (அல்லது) 10-05-2018 அன்று டெல்லியில்., தேசிய அளவிலான கருத்தரங்கம் நடத்துவது என கடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால்., தற்போது தெரு முனைப் பரப்புரை இயக்கம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதால்., கருத்தரங்கை தள்ளி வைப்பது என்றும் தேதி அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
AUAB கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் 08-05-2018 அன்று காலை 11-30 மணிக்கு AIBSNLEA சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
எனவே., தோழர்களே...!
நம் கண்ணின் மணியாம்...!
நம் BSNL நிறுவனம் காத்திட..........!
தனி டவர் கம்பெனி தடுத்திட...............!
ஒலிக்கட்டும் வீதியிலே நம் குரல்...............!
ஒழியட்டும் BSNL விரோதச் செயல்....................!
களமிறங்குவோம்..........! காரியமாற்றுவோம்..........!

Tuesday, April 24, 2018

வாழ்த்துகிறோம்!
கடலூர் மாவட்ட TMTCLU  மாவட்ட செயலர் தோழர் A.S.குருபிரசாத் அவர்கள் JE இலாக்காத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற தோழரை மாவட்ட சங்கங்களின் சார்பில் வாழ்த்துகிறோம்.

Saturday, April 14, 2018


புரட்சியாளர் மாமேதை டாக்டர் B.R.அம்பேத்கர்
127 வது நிறந்த நாள்

நமது NFTE மாவட்ட சங்கத்தின் சார்பில் இன்று புரட்சியளர் டாக்டர் B.R.அம்பேத்கார் அவர்களின் 127வது பிறந்த நாளில் அவரது சிலைக்கு தோழர் குளோப் மாநில நிர்வாக உறுப்பினர்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.. உடன் நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், தோழர் சு.தமிழ்மணி உள்ளிட்ட  நமது சங்கத் தோழர்கள்...