.

Tuesday, May 15, 2018

சீர்மிகு சிதம்பரம் மாநாடு
(பகுதி 2)
’BSNL வளர்ச்சியில் நமது பங்கு என்ற தலைப்பில் மாவட்ட மாநாட்டுச் செயல்பாட்டறிக்கையில் இரண்டு பக்க அளவில் விரிவாக நாம் எடுத்த நடவடிக்கைகள், மேளாக்களில் நமது பங்கு, மேளாக்களில் பயன்படுத்த EKYC கருவிகளை நிர்வாகத்துடன் வாதடிப் பெற்றது, பணிக்குழுக்களில் செயலூக்கமிக்க நமது செயல்பாடு, 2017-ம் ஆண்டிற்கான இலக்கை விஞ்சியது போலவே 2018லும் தொடரும் நமது செயல்பாடு எனப் பலவும் விவரிக்கப்பட்டிருக்கிறதுஅதன் தொடர்ச்சியாய் நமது மாநாட்டில், வீழ்வோம் என்று நினைத்தாயோ? நாங்கள் BSNL” என்ற தலைப்பில் நாம் நடத்திய கருத்தரங்கமே மாநாட்டின் மையப் பொருள் எனலாம்.

கருத்தரங்கில் நாம் பெரிதும் எதிர்பார்த்த நமது அன்பிற்கினிய தலைமைப் பொதுமேலாளர் திரு. R. மார்ஷல் ஆன்டனி லியோ அவர்கள் கலந்து கொள்ள இயலாதது ஒரு வருத்தமேஅவர் டெல்லியில் தலைமைப் பொது மேலாளர்களின் (HOCC) இரண்டு நாள் மாநாட்டிற்குச் செல்ல வேண்டி நேரிட்டதால் நமது கருத்தரங்கில் அவரால் கலந்து கொள்ள இயலாமற் போனது. ஆனால் டெல்லியில், தமிழகத்தின் சார்பில் அவர் விருதினைப் பெற்றுக் கொண்டது என்பது நமது கருத்தரங்கின் நோக்கத்தைப் பறைசாற்றுவதாகவே நாம் பெருமைப்படுகிறோம்கருத்தரங்கில் அவரது வாழ்த்துச் செய்தி மாவட்டச் செயலரால் படிக்கப்பட்டபோது பலத்த கரவொலி எழுந்தது.

கருத்தரங்கில் நமது மாவட்டப் பொது மேலாளர் திரு. ஜெயகுமார் ஜெயவேலு B.E., M.B.A அவர்களும், துணைப் பொதுமேலாளர்கள் திருமதி K. சாந்தா அவர்களும் திரு மதுரை அவர்களும் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் நமது பாசத்திற்குரிய மேனாள் மாநிலச் செயலாளர் R. பட்டாபி அவர்களின் உரை நிறைந்த தகவல்களுடன் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருந்தது.  (அவரது உரைக் குறிப்புத் தனியே தரப்படுகிறது.) சகோதரத் தொழிற்சங்கத் தலைவர்கள் உரையாற்றினர்கருத்தரங்கத்தினால் உற்சாகமடைந்த நமது மாவட்டப் பொது மேலாளர் தாம் தயாரித்து வந்த ஆங்கில உரையை மாநாட்டின் ஆவணமாக நம்மிடம் தந்து விட்டு தமிழிலேயே பேசினார்.  (அந்த ஆங்கில உரையும் அதன் தமிழாக்கமும் தனியே பின்னர் பதிவிடப்படும்.)  தோழர்களாலும் தோழியர்களாலும் நிறைந்திருந்த மாநாட்டு அரங்கம் மிக அமைதியாக, ஆர்வமாக கருத்தரங்கச் செய்திகளைச் செவிமடுத்தனர்

SNEA மாவட்டச் செயலர் தோழர் P. சிவக்குமார்  பேசும்போது தொழில்நுட்பப் பிரச்சனைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம், 4- G ஸ்பெக்டரம் இன்னும் வழங்கப்படாத நிலையில் டேட்டா வேகத்தை நாம் எப்படி அதிகரிக்கச் செய்கிறோம் என்பதை விவரித்து சிம் விற்பனை மேளாக்களில் NFTE தோழர்களின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார்தோழர்கள் பால்கி மற்றும் மாவட்டப் பொறியாளர் P. சிவக்குமரன் கலந்து கொண்டு சிறப்புச் சேர்த்தனர்.

FNTO மாநிலச் செயலர் தோழர் R. ஜெயபாலன் பேசும் போது நமது ஆண்டறிக்கையை மிகச் சிறப்பாக உள்ளதாகப் பாராட்டினார்இன்றைக்கு நாம் பென்ஷன் பெற்றுவருவதற்குக் காரணம் தானைத் தலைவர் குப்தாவும் வள்ளிநாயகமும்தான் என்பதைக் குறிப்பிட்டார்.

SEWA மாவட்டச் செயலர் தோழர்        M. தினகரன் நேரத்தின் அருமைகருதி இரத்தினச் சுருக்கமாக தமது சங்கம், NFTE சங்கத்தின் கூட்டணிச் சங்கமாக இருப்பதற்குப் பெருமைப்படுகிறோம் என்று கூறி மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்து தங்களின் ஒத்துழைப்பு நமது சங்கத்திற்கு என்றும் தொடரும் என உறுதிபடத் தெரிவித்தார்.

PEWA மாவட்டச் செயலர் தோழர் V. நல்லதம்பி அரசியல் சார்ந்து தமிழகம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு, மஸ்தூர்கள் நிரந்தரம், பகுதிநேர முழுநேர மாற்றம் என NFTE சாதனைகள் ஏராளம் எனக் குறிப்பிட்டார்.

AIBSNLEA மாவட்டச் செயலர் தோழர் S. ஆனந்த் தான் 2002 ல் JTOவாக பணிக்கு வந்தபோது சொல்லப்பட்டதற்கு மாறாக BSNL தொடர்ந்து இன்று வரை 17 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்படுகிறதுஇனியும் நாம் வளர்வோம், நமது நிறுவனம் அனைத்து வகையான சேவைகளையும் வழங்கி வருகிறது எனப் பெருமையுடன் குறிப்பிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் புதிய மாவட்டச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டத் தோழர் R. அசோகன் (AGM Retd) பேசும்போது பொதுத் துறைகளைக் காப்பதற்கான நமது போராட்டம் 15 ஆண்டுகளாகத் தொடர்கிறதுஉங்களது பொதுச் செயலாளர் தோழர் சந்தேஷ்வர் சிங் அவர்களின் செயல்பாட்டிற்குப் பாராட்டுகள் என்றார்.

BSNLEU மாவட்டச் செயலர் தோழர் K.T. சம்பந்தம் தோழர் பட்டாபிஅவர்களின் உரையின் கருத்துகளை மேற்கோள்காட்டி நமது தொலைத்தொடர்பு துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது; ஆனால் அதை முறியடிக்கும் வகையில் நமது ஒன்றிணைந்த போராட்ட இயக்கங்கள் தொடர்கின்றன என்றார்.
DGM (CFA) திருமதி K. சாந்தா அவர்கள் பேசும்போது, உங்கள் அனைவரையும் ஒன்றாக இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சிஇதைப்போல இரண்டு மடங்கு கூட்டத்தை ஓய்வூதியர் மாநாட்டில் பார்த்தேன்நம்முடைய எண்ணிக்கை குறைந்தாலும் நம்முடைய பொறுப்பு கூடியிருக்கிறதுநிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்நம்முடைய பலம், நம்முடைய ஆயுதம், நம்முடைய ஒற்றுமைதான் என்றார்.

DGM (CM) திரு மதுரை அவர்கள் ஆந்திராவில் பணியாற்றுகின்ற போது தமது அனுபவங்களையும் அங்கு தோழர்கள் உதவியதையும் நினைவுபடுத்திப் பேசினார்.

         கருத்தரங்கின் நிறைவுரையாக நம்முடைய பொதுமேலாளர் திரு திரு. ஜெயகுமார் ஜெயவேலு B.E., M.B.A அவர்கள் மிகச் சுருக்கமாக ஆனால் ஆழமாகப் பேசினார்மதிய  உணவுக்கான நேரம் நெருங்கி விட்டதால் தமது  உரையைச் சுருக்கிக் கொண்டார் எனக் கருதுகிறோம். அவர் தமது உரையில், சிதம்பரம் அழகான நகரம், நடராஜரின் நடனம் அழகு, சிதம்பரத்தின் மரபார்ந்த கதைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் போலவே உங்களது NFTE சங்கமும் முக்கியத்துவமுடையதாக இருப்பதைப் பார்க்கிறேன்இதற்கு முன்னால் இத்தகைய மாநாடுகளில் நான் பேசியது இல்லை, அரங்கம் நிறையப் பங்கேற்றிருக்கிறீர்கள். ஒருவகையில் NFTE சங்கம் தனது உறுப்பினர்களுக்குக் கற்பிக்கிறது என்றே கருதுகிறேன். NFTE சங்கம் நிர்வாகத்துடன் பிரச்சனைத் தீர்வில் ஒத்துழைக்கிறதுநிர்வாகமும் எங்களால் இயன்ற அளவு விரைவாக, விதிகளுக்கு உட்பட்டு, குறைந்த காலத்தில் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிக்கிறது.
          நமது வருவாய் குறைந்திருக்கிறது. ஆனால் இதற்கு முன்னால் தொலைத்தொடர்பில் ஒரு நிறுவனம் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்ததுதற்போது ஏர்செல்நம்முடைய ஒர்க் போர்ஸ்உழைப்பாளிகளின் படைநம்முடைய பலம், நம்மை யாரும் வீழ்த்த முடியாது
          அரங்கத்தில் கட்டியுள்ள இந்தக் கொடிகளை நான் பார்க்கிறேன்அது ஒரு செய்தி சொல்வதாக எனக்குப் படுகிறதுஒன்றோடு ஒன்று இணைந்த கரங்கள்அது சொல்லும் மேஜேஞ், ஒன்றுபட்டு எதிர்கொள்வோம் வெல்வோம் நன்றி வணக்கம்

          பொது மேலாளரின் உரையோடு கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.

          வரவேற்புக் குழு மிகச் சிறப்பான சுவையான மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பழங்களும் இனிப்புகளும் கூடிய சுவையான உணவை அவர்களின் விருந்தோம்பல் வென்றது என்றால் மிகையில்லை.

     
     உணவு இடைவேளையில், புதுவைகோமாளிக் கலைக்குழுவினரின்  கலைநிகழ்ச்சி மத்திய அரசின் தவறான கொள்கைகளால் மக்கள் படும் அல்லல்களைக் கலை நேர்த்தியுடன், கிராமிய மெட்டுக்களில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியதுஅந்த மதிய நேரத்திலும் அரங்கம் நிறைந்திருந்தது என்ற ஒன்றே கலைநிகழ்ச்சியின் சிறப்பைப் பாராட்டப் போதுமானது.       


No comments:

Post a Comment