Friday, May 18, 2018


சீர்மிகு சிதம்பரம் மாநாடு   (பகுதி 3)

சிதம்பரம் மாவட்ட மாநாட்டு பதிவின் இறுதிப் பகுதிஇதில் கருத்தரங்கில் தோழர் பட்டாபி அவர்கள் ஆற்றிய உரை, அமைப்பு நிலை, புதிய நிர்வாகிகள் தேர்வு இடம்பெறுகின்றன.

தோழர் பட்டாபி அவர்களின் உரை
      

  “தோழர் ஸ்ரீதர் உள்ளிட்ட மாவட்டச் சங்கத் தோழர்களுக்குப் பாராட்டுதல்களை முதலில் தெரிவிக்கிறேன். உங்கள் மாவட்டச் சங்கம் மாநிலச் சங்கத்திற்கு எப்போதும் உதவியாக இருந்து வருகிறதுதோழர் ஸ்ரீதருக்கு என்று தனித்த குணம்.  அது, Doing is my Saying என்பது; அதாவது, நாங்கள் என்ன செயல் ஆற்றுகின்றோமோ அதுதான் எங்கள் சொல்செய்வது என் சொல்-- என்பதாகும்இன்னொரு வகையினர் உண்டு, அவர்கள் Saying is my Doing வகையினர், சொல் வீரர்கள்பேச்சு, பேச்சு, பேச்சுதான் செயல் என்பவர்கள்எனவேதான் நீங்கள் தனித்த குணமுடையவர்கள் எனப் பாராட்டுகிறேன். செயல், செயல் செயலன்றி வேறில்லை.
        அரசு துணை டவர் கார்பரேஷனைப் பதிவு செய்து விட்டதுஅதன் சாராம்சங்களை ஒரு கட்டுரையாகப் பதிவிட்டிருந்தேன், யாராவது படித்துப் பார்த்து எதிர்வினை ஆற்றுவார்களா என்றுஅந்தக் கட்டுரைக்கு ஒரே ஒரு லைக் மட்டும் கிடைத்தது, அந்த லைக் ஸ்ரீதர் உடையது. உண்மையை ஒருபோதும் கைவிடாது ஒரு தவமாக மேற்கொள்வது என்பதைச் செய்து வருகிறோம்எனவேதான், டவர் கார்பரேஷன் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுவிட்டது என்பதை எழுதினோம்.
        நம்முடைய மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்கள் மிக அதிகமான முழக்கங்களைத் தந்து கொண்டே இருக்கிறார். அதற்கே அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். காங்கிரஸ் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழ்நாடு. அதே வரிசையில் அவர் தந்த முழக்கம்தான்BSNL போலப் பொதுத் துறை இல்லாத டெலிகாம்  2011லிலே அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது காங்கிரஸ் அரசு, அதற்குத் தயக்கம் இருந்தது. எனவே தான் (உலக முதலாளித்துவ ஆணைகளுக்கு கேற்ப அவர்களது விரும்பம் வேறாக இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு) டெலிகாம் கொள்கை அறிவித்தபோது, பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்வது (continuation of PSUs);  கேந்திரமான பொதுத்துறைப் பங்களிப்பைப் பாராட்டுவது    ( Prime Role of PSUs appreciated ) என்றெல்லாம் சொல்லாடல்களுக்கு மத்தியில் டெலிகாம் கதவைத் திறந்து விட்டது
1999 ல் முடிவு செய்தார்கள், டெலிகாம் துறை(DOT) இனியும் தொடர்ந்து சேவை தரும் துறையாக நீடிக்க வேண்டாம் (Not anymore as a Service Provider) மாறாக, கொள்கைகளை முடிவு செய்யும் துறையாக இருக்கட்டும் (Let that be as a Policy maker). இப்படிச் சொல்லி தான் BSNL நிறுவனத்தைத் துவக்கினார்கள் Thus BSNL was created. போஸ்டல் அண்ட் டெலிகிராப்பாக இருந்து, டெலிகிராப் இன்ஜினியரிங்காக மாறி அதுவும் டெலிகாம் என்றானது.
தற்போது அந்த டெலிகாமும் இல்லாது போகப் போகிறது, அந்த இடத்தில் டிஜிடல் கம்யூனிகேஷன் பாலிசி வரப் போகிறதுஅதற்கான திட்டவரைவும் (Draft) வெளியிடப்பட்டுள்ளது.

இறையாண்மை என்பது அரசாங்கத்தின் கையில் இல்லை, மாறாக, அது மக்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறதுஅந்த வகையில் புதிய டிஜிடல் கம்யூனிகேஷன் கொள்கைபுதிய டெலிகாம் கொள்கை என்ற பெயரில் அல்ல பற்றிய திட்ட வரைவு மக்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறதுநாம் மக்களைச் சந்திக்கப் போகிறோம்.

DoT எழுதிய கடிதம் சில உண்மைகளைப் பேசியதுஅது, 04—01—2018ல் டவர் கார்பரேஷன் பதிவு செய்யப்பட்டு விட்டது என்பதைக் கூறியது. (BSNLTCL) BSNL டவர் கார்பரேஷன் லிமிட் என்ற பெயரில் பதிவுஅந்த நிறுவனம் பிசினஸ் துவக்க வேண்டு மென்றால், BSNL நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு கையெழுத்திட வேண்டும். முந்தைய காலங்களைவிட தற்போது நமது தொலைத்தொடர்பு கோபுரங்கள் மூலம் வரும் வருமானம் அதிகம்அவர்கள் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறார்கள் என்பது எளிமையாகப் புரிய வேண்டுமென்றால், இங்கே DGM (CM) வந்திருக்கிறார்கள்அவர்களிடம் இருக்கும் CM பிரிவை அப்படியே எடுத்து டவர் கார்பரேஷனிடம் தரப் போகிறார்கள்நமது துறையின் பிரம்மாண்டத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்தியாவின் அனைத்து நிறுவனங்களின் மொத்த டெலிகாம் பிசினஸ் 7 லட்சம் கோடி ரூபாய் அளவில் நடக்கிறது. மொத்த GDP யில் பெரும் பங்குஎனவே தான் புதிய கொள்கைகள், புதிய நிறுவனங்கள்.

டவர் கார்பரேஷன் துவக்கி விட்டார்கள், National Optic Fiber Grit Corporation ஒன்றை உருவாக்கப் போகிறார்கள், அதை NIC ( National Informatics Centre ) உடன் சேர்ப்பதற்காகரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கை என்ன தெரியுமா, டவர்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்ஏற்கனவே பல டவர்களை ஷேர் செய்துதான் வருகிறார்கள்அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் சொல்ல வேண்டாம், இந்தியன் டெலிகாம் சர்வே ஒன்றில் ஒரு பத்தியில் கூறியிருக்கிறார்கள், இந்திய டெலிகாம் துறையில் ஒரு ரௌடி உள்ளே புகுந்து விட்டு டெலிகாம் துறையையே கலகலக்க வைத்து விட்டான் என்று. எனவே நம்முடைய கோரிக்கைகள் இப்படி மாற வேண்டும்.
·        BSNL நீடிக்கும் என்பதை உறுதி செய்
·        4G /   5G ஸ்பெக்ட்ரம் இலவசமாக வழங்குஇனி டேட்டாதான் செல்வமாக இருக்கப் போகிறது
·        ஸ்மார்ட் சிட்டிகளுக்கு BSNL க்கு முன்னுரிமை கொடு
இரயில்வே ஆதார உள்கட்டமைப்புகள் போல டெலிகாம் உட்கட்டமைப்பு –Infra structure- களுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

தற்போது விஷன்-2022 என்று பேசுகிறார்கள்ஏன் அதை முன்புபோல விஷன் 2020 என்று சொல்லாமல் 2022 என்கிறார்கள் என்றால், 2022—ம் ஆண்டில் இந்திய தேசம் தனது விடுதலையின் பவளவிழாவைக் கொண்டாட இருக்கிறது. அப்போதும் தாங்கள் ஆட்சியில் இருப்போம் என்று அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.

நாம்Vision PSU – நம் எதிர்கால இலக்கும் செயல்திட்டமும் பொதுத்துறைதான் என்பதைக் கையிலெடுக்க வேண்டும்.
அதிகமான பேர்களுக்கு வேலை கொடுத்த ஒரே பொதுத்துறை இரயில்வேக்கு அடுத்தபடி BSNL தான்.
நூறு ரூபாய் விற்பனை செய்ய நமக்கு நூற்று இருபது ரூபாய் செலவாகிறது, MTNL ல் அதுவே தற்போது நூற்றுக்கு 175 செலவாகிறது. 2009 வரை நம்முடைய வரிக்கு முந்தைய லாபம் என்பது 50 கோடிரூபாயாக இருந்தது. தற்போது அது வரிக்கு முந்தைய நட்டம் என்பதாக மாறி இருக்கிறதுஇவையெல்லாம் கூட நம்முடைய ஊதிய மாற்றத்தில் நாம் எதிர் நோக்க வேண்டியவைகளாக உள்ளன.

நம்முடைய உட்கட்டமைப்பு செல்வாதாரங்களைக் காப்பது என்பதே பிரச்சனையாகி உள்ளதுகுப்தா சொல்வார், நம்முடைய போர்த் தந்திரம் என்பது வீர சிவாஜி பின்பற்றியதுஅது ராணாபிரதாப் சிங்கை பின்பற்றியது அல்ல என்றுதொழிற்சங்கத்திற்கு வழங்கிய  அவருடைய அறிவுரை தமிழக அரசியலுக்கும் கூட பொருந்துவதாக உள்ளது. கண்ணை மூடிக் கொண்டு மாதத்தின் முப்பது நாட்களுக்கும் போராடத் திட்டமிட்டு போராடிக் கொண்டே இருப்பதல்ல. தாக்கு, வெற்றியை சிறிது சிறிதாக ஓன்று திரட்டு என்ற வகையில் நம்முடைய போராட்டங்கள் தீர்வை நோக்கிய போராட்டங்களாக இருக்க வேண்டும்வெறும் அடையாளப் போராட்டமாக முடிந்து விடக் கூடாதுஅதை நமது தொழிற்சங்கங்கள் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டுகடலூர் மாவட்டச் சங்கம் அதனைச் செய்யும் என்று கூறி நன்றியோடு நிறைவு செய்கிறேன்”  

கருத்தரங்கம் நிறைவு பெற்றபின், மாநாடு மதிய உணவுக்காக ஒத்தி வைக்கப்பட்டதுகீழ்த்தளத்தில் மறைந்த சிதம்பரம் தோழர் P.கன்னையன் பெயரில் அமைந்த விருந்தோம்பல் கூடத்தில் வரவேற்புக்குழுவினரால் பரிமாறப்பட்டச் சுவை மிகுந்த உணவு விருந்தோம்பலின் இலக்கணமாக அமைந்ததுஅதே போழ்து, மாநாட்டு அரங்கில் புதுவைகோமாளிக் கலைக்குழுவினரால் வழங்கப்பட்ட செவிநுகர் கனிகளை அரங்கம் நிறைந்து உண்டு மகிழ்ந்தனர்.
பொருளாய்வுக் குழு:-
மதிய உணவிற்கு பின்பு பிற்பகல் 3-30 அளவில் மீண்டும் பொருளாய்வுக்குழு துவங்கியதுமாவட்டச் செயலரால் செயல்பாட்டறிக்கை முன் வைக்கப்பட்டதுமுதல் நாள் இரவே மாவட்டச் செயற்குழுவில் செயல்பாட்டறிக்கை வரிக்கு வரி படிக்கப்பட்டு, விரிவாக விவாதிக்கப் பட்டதாலும், மாவட்டச் செயலர் இரா. ஸ்ரீதர் அவர்கள் காலை தமது அறிமுக உரையில் செயல்பாட்டறிக்கை விவரங்களை விரிவாகக் குறிப்பிட்டதாலும், மாநாட்டில் பத்தி பத்தியாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது
பின்னர் மாவட்டப் பொருளாளர் தோழர் A. சாதிக் பாஷா அவர்களால் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுவரவு செலவு அறிக்கையும் முதல் நாள் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு விளக்கங்கள் தரப்பட்டிருந்தனவரவு செலவு அறிக்கையில் தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை நிதி ரூபாய் ஐந்து லட்சம் பத்திரமாக இருந்தபோதும், இன்னும் மாவட்டப் பொறுப்பாளர்கள் செயல்படுத்தும் வகையில் மாற்றப்படவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்ததுவரவு செலவு அறிக்கையும் மாநாட்டுப் பிரதிநிதிகளால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மாநாட்டிற்குத் தலைமை வகித்த மாவட்டத் தலைவர் தோழர் செல்வம் அவர்கள், பிரதிநிதிகள் பதிவு முடிக்கப்பட்டு 304 சார்பாளர்களுடன் மாவட்ட மாநாடு முறையாக அமைக்கப்பட்டதாக அறிவித்தார்பின்னர், வரும் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்வு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்கு அடிப்படையான கிளை வாரியாக மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள் எண்ணிக்கை படிக்கப்பட்டது.

இதில் கடலூர் வெளிப்புறக் கிளையைச் சார்ந்த தோழர்கள் பிரச்சனை எழுப்பினர்தோழர்கள் S.ஆனந்தன் மற்றும்  M. மஞ்சினி தங்களது ஆட்சேபக் கருத்துகளை விளக்கிப் பேசினர்கடலூர் வெளிப்புறக் கிளைச்செயலாளர் தோழர் E. விநாயக மூர்த்தி மாவட்ட அலுவலகக் கிளையிலிருந்து சில தோழர்கள் எப்படி தங்கள் கிளையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர் என்பதை விளக்கினார்இது குறித்து முன்பே பிரச்சனை மாநிலச் செயலாளருக்கு கடிதம் மூலம் அனுப்பப்பட்டிருப்பதால், அமைப்பு விதிகளின் அடிப்படையில் மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன் முன் வந்து விளக்கம் அளித்தார்அவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்டு வெளிப்புறக்கிளை சார்பாளர் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது சரியே என மாவட்டத் தலைவர் அறிவித்தார்.

பலகட்டங்களில் நிர்வாகிகள் தேர்வு ஒருமனதாக, ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக, அமிதசரஸ் அகில இந்திய மாநாட்டு உணர்வை உயர்த்திப் பிடிப்பதாக இருக்க வேண்டும் என்பது பலரால் வலியுறுத்தப்பட்டதுஎனவே மாநிலத் தலைவர் தோழர் P. காமராஜ் அவர்களும் மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன் அவர்களும் கடலூர் மாவட்டத் தோழர்களோடு தனித்தனியாகவும் குழுவாகவும் விவாதித்தனர்.

அந்த ஒற்றுமை முயற்சி நடைபெறும்போழ்து, மாநிலச் சங்கச் சிறப்பு அழைப்பாளர் தோழர் V. இளங்கோவன், மாநிலத் துணைத் தலைவர் தோழர் V. லோகநாதன் மற்றும் மாநில உதவிச் செயலர் தோழர் P. சுந்தரமூர்த்தி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியாக விழுப்புரம் தோழர் G. கணேசன், கடலூர் தோழர் இரா ஸ்ரீதர் மற்றும் கடலூர் தோழர் A.S. குருபிரசாத்  அவர்களை முறையே மாவட்டத் தலைவர், செயலர் மற்றும் பொருளாளராகக் கொண்ட 21 தோழர்கள் அடங்கிய பட்டியல் வரும் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.  (பட்டியல் தனியே வெளியிடப்பட்டுள்ளது)

மாநிலத் தலைவர் தோழர் P. காமராஜ் அவர்கள் நிறைவுரையாக புதிய நிர்வாகிகளுக்குப் பாராட்டுரை வழங்கினார்இதுவரை சிறப்பாகப் பணியாற்றிய தோழர்கள் R.செல்வம் ,P.அழகிரி, A. சாதிக்பாஷா   A.C. முகுந்தன்,S.அன்பழகன் மற்றும் திண்டிவனம் V. குப்பன் ஆகியோரின் பணியும் பாராட்டப்பட்டது.

மாவட்ட உதவிச் செயலர் தோழர் D. குழந்தைநாதன் அனைவருக்கும் நன்றி கூற மாநாடு தில்லைக் கூத்தனின் திருநடனமாக அனைவர் நெஞ்சிலும் நிறைந்திருக்கிறது.

சுவையான எளிய இரவு உணவும் வழங்கப்பட்டது.
மாவட்டச் செயல்பாட்டறிக்கையின் நிறைவுரையில் குறிப்பிட்டதுபோல, நமக்கு நிறைவு என்பது நிறைவு பெறாது இருப்பதுஅந்த வகையில் வரும் செயற்குழுவில் அமைப்பு நிலை பற்றி விவாதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய நிர்வாகிகள்,
புதிய குழு,
 புதுமைகள் படைக்க
புதிய வேகத்தோடு புறப்படட்டும்!

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!....
 தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக!....


NFTE ஜிந்தாபாத்இன்குலாப் ஜிந்தாபாத் !.....

No comments:

Post a Comment