.

Wednesday, May 9, 2018


சிதம்பரத்தில் 8.5.2018 அன்று நடைபெற்ற 6வது கடலூர் மாவட்ட மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் 

மாவட்டத் தலைவர்:  தோழர். G.கணேசன்  TT  /VLU
மாவட்ட துணைத்தலைவர்கள்: 
தோழர். G.ரங்கராஜு  TT/PRT
தோழர். V. கீதா OS(P) - TRA / CDL
தோழர். R.அகஸ்டியன் TT/ VLU
தோழர். E.அப்துல்லா TT/ NTS
தோழர். S. குமார் TT/TNV 
தோழர் P.தங்கசாமி TT/CDM  

மாவட்ட செயலர்: தோழர். இரா. ஸ்ரீதர் SS(O) / CDL
மாவட்ட உதவி செயலர்கள் 
                        தோழர் D.குழந்தைநாதன் JE/CDL
                        தோழர். D. ரவிச்சந்திரன் TT / CDM
                        தோழர் M.மஞ்சினி TT/CDL
                        தோழர் S.மணி TT/KAC
                        தோழர் P.M.K.D.பகத்சிங் TT/TGD
                        தோழர் P.மாயக்கிருஷ்ணன் TT/NTS

மாவட்ட பொருளர்: தோழர் A.S.குருபிரசாத் TT/CDL
மாவட்ட அமைப்புச்செயலர்கள் 
                        தோழர் K. அம்பாயிரம் TT / ULD
                        தோழர் V.இளங்கோவன் JE பெண்ணாடம்
                        தோழர் R.பன்னீர்செல்வம் TT/CDL
                        தோழர் V.மாசிலாமணி JE/VLU
                        தோழர் S.நடராஜன் TT/VLU
                        தோழர் V.ஜெயராமன் TT/GIE

தணிக்கையாளர் தோழர் A.சாதிக்பாஷா AO/CDL

புதிதாகத் தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு
                              மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.....


ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1 :  பல அலுவல்களுக்கிடையேயும்  நமது மாவட்டச் சங்கம் நடத்தியவீழ்வோம் என்று நினைத்தாயோ? நாங்கள் BSNL ! ” கருத்தரங்கில் கலந்து கொள்ள இயலாமைக்கு  வருத்தத்தை தெரிவித்ததுடன் வாழ்த்து செய்தியும்  அனுப்பிய  நமது மரியாதைக்குரிய திருமிகு R.மார்ஷல் ஆண்டனி லியோ ITS, தலைமை பொது மேலாளர், தமிழ்நாடு வட்டம் BSNL அவர்களுக்கு இந்த மாவட்ட மாநாடு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது.
            அதேபோல கருத்தரங்கில் கலந்து கொண்ட திரு  ஜெயக்குமார் ஜெயவேலு BE,MBA   கடலூர் BSNL பொது மேலாளர் மற்றும் சகோதரச் சங்கத் தலைவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறது.
தீர்மானம் 2 :  வருவாய் பெருக்கம் ( ) தரைவழி இணைப்பு
          சிம் விற்பனையில் ஒன்றிணைந்து சாதித்தது போல, தரைவழி இணைப்பு மற்றும் அகல அலைக்கற்றை இணைய இணைப்புகளை அதிகரிக்கவும் நடைபெறும் மேளாக்களில் நமது தோழர்கள் அதிக அளவு பங்குபெற இந்த மாநாடு பணிக்கிறது. அதற்கு முன் எந்தப்பகுதியில் மேளா நடத்தப்படுகிறதோ அந்தப் பகுதி பில்லர் எல்லா வகையிலும் சரிசெய்யப்பட வேண்டும் என நிர்வாகத்தை இந்த மாநாடு கோருவதுடன், சோதனை முறையில் எந்தப்பகுதி பில்லரையும் சரிசெய்யும் பொறுப்பை எங்களது சங்கத் தோழர்கள் ஏற்பார்கள் என்றும் உறுதி அளிக்கிறது.
          () செல்கோபுரப் பராமரிப்பு
          பல இடங்களிலும் சந்தாதாரர்களின் புகார் சிக்னல் கிடைக்கவில்லை என்பதுதான்இதனை சரி செய்வதற்கு செல்கோபுரத் தொழில்நுட்பப் பராமரிப்பிற்கு முன்னுரிமை தர வேண்டும் என இந்த மாநாடு கோருகிறது. இதனால் Call conjunctions, Call drops. Data delay முதலிய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு சந்தாதாரர் மகிழ்ச்சியும், நிறுவன வருமானமும் கூடும். மற்றும் 4-G-  5 –G பற்றி விவாதிக்கப்படும் நிலையில் நாம் இன்னும் அனைத்து கோபுரங்களையும் 3—G மாற்றி அமைப்பதிலேயே பின்தங்கி இருக்கிறோம். இதற்கு உயர் முன்னுரிமை வழங்க நிர்வாகத்தை இந்த மாநாடு கோருகிறது.
() WLL பராமரிப்பு
          மாவட்டத்திலுள்ள 2500 வில்போன் இணைப்புகள் VPT இணைப்பிற்கு வருடத்திற்கு ரூ8000/= வீதம் USO நிதியாக வருமானம் தருகிறதுஎனவே அனைத்து வில்போன் இணைப்புகளையும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என இம்மாவட்ட மாநாடு நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறது.  
தீர்மானம் 3 :  மாவட்ட நிர்வாகம்
          நிர்வாகத்தின் வருவாய் பெருக்க முயற்சிகளை இம்மாநாடு மனதார வாழ்த்தி வரவேற்பதுடன் எங்கள் உறுப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்பையும் உறுதி செய்கிறது. இந்தக் கூட்டு முயற்சி முழுமையாகப் பலனளிக்க வேண்டுமானால் ஊழியர்களின் மனநிறைவு தவிர்க்க முடியாத முன்நிபந்தனையாவதை நவீன நிர்வாகவியலும் ஒப்புக்கொள்கிறதுஎனவே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் தீர்வில் நமது மாவட்ட நிர்வாகம் இன்னும் கூடுதல் அக்கறைக்காட்ட வேண்டும் என்பது இம்மாநாட்டின் விழைவுதலமட்ட மாறுதல்கள் உட்பட அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறதுஇதனால்  அனைத்து மட்டங்களிலும் நிர்வாகம்ஊழியர்கள் உறவு மேம்படும் எனக் கருதுகிறது.
தீர்மானம் 4 :  ஜெசிம் கூட்டு ஆலோசனைக் குழு / பணி மேம்பாட்டுக் குழு /                மாதாந்திரப் பேட்டி
          இம்மாவட்டத்தில் ஜெசிம் கூட்டு ஆலோசனைக் குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
          பணி மேம்பாட்டுக்குழுவின் கூட்டங்கள் முறைப்படுத்தப்படுவதுடன், கூட்ட முடிவுகளின் மேல் தொடர் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை இம்மாநாடு கோருகிறது.
          பிரச்சனைகள் போராட்டங்களின் போது மாவட்டச் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதுஆனால் அலுவலக பேட்டிக் குறிப்புகளுடன் முறையான மாதாந்திரப் பேட்டி நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறதுஇதனால் பிரச்சனைகள்போராட்டப் பின்னணி இன்றிஅமைதியாகவும் முழுமையாகவும் விவாதிக்கப்படுவதுடன்மாவட்டத்தின் தொழிலமைதி பெரிதும் மேம்படும் என இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம் 5 : செல் கோபுரத் தனிநிறுவனம் எதிர்ப்புப் போராட்டம்
          மாவட்டத்தில் அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பினால் நடத்தப்படும் போராட்டங்களில் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கும் ஊழியர்களுக்கும் கூட்டு இயக்கங்களை வழிநடத்தும் தலைவர்களுக்கும் இம்மாநாடு பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறது.
          மே மாதம் 7 முதல் 11 தேதி வரை அகில இந்திய அளவில் நடைபெறும் செல் கோபுரத் தனிநிறுவனம் எதிர்த்து நடத்தப்படும்தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களில்மக்கள் ஆதரவைத் திரட்ட பெருமளவு கலந்து கொள்ள ஊழியர்களை இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.
  தீர்மானம் 6 : தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை
          () வரும் ஆண்டுகளுக்கு அறக்கட்டளையின் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் கீழ்க்கண்டத் தோழர்களை இம்மாநாடு ஒருமனதாக நியமிக்கிறது.
          அறக்கட்டளைத் தலைவர் தோழர் K. சீனுவாசன்  அறக்கட்டளைச் செயலாளர் தோழர் V. லோகநாதன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள்  1. தோழர் G. ஜெயச்சந்திரன், திண்டிவனம்   2. தோழியர் S. சுசரிதா, கடலூர்  3. தோழர் K. சங்கர் விழுப்புரம் 4. தோழர் A.C.முகுந்தன் கடலூர், 5.தோழர் R.ராஜேந்திரன்,கல்லை, 6. தோழர் R.செல்வம் விழுப்புரம்,  7. தோழர் P .ஜெயபால் சிதம்பரம் , 8. மாவட்ட செயலர்.
          () தோழர் சிரில்  நினைவு அறக்கட்டளை நிதி
          அறக்கட்டளை நிதியாக ரூபாய் ஐந்து லட்சம் வங்கியில் இருக்கும் வங்கிக் கணக்கை இம்மாநாடு நியமித்துத்துள்ள அறக்கட்டளைத் தலைவர் மற்றும் செயலாளர் இணைந்து செயல்படுத்தும் வகையில் பெயர் மாற்றம் செய்ய இம்மாநாடு ஒப்புதல் வழங்குகிறது.
தீர்மானம் 7 : சந்தா
          உறுப்பினர் மாத சந்தா தற்போது ரூபாய் 25/= அலுவலகத்தாலேயே பிடித்தம் செய்யப்படுகிறதுஇதனைத்தவிர கிளைச் சங்கச் செயல்பாடுகளுக்காக வருட சந்தாவாக ரூபாய் 100/= கிளைச் சங்கத்திற்கு அளிக்க உறுப்பினர்களை இம்மாநாடு ஒருமனதாகக் கோருகிறது.
தீர்மானம் 8 : வரவேற்புக்குழுவிற்குப் பாராட்டு

          மிகச் சிறப்பாக மாவட்ட மாநாட்டை நடத்தி முடித்திட்ட  சிதம்பரம் வரவேற்புக்குழுத் தோழர்களை இம்மாநாடு நன்றி கூறிப் பாராட்டுகிறதுவெகுவிரைவில் தனியாக நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தப்பட்டு உழைத்த ஒவ்வொரு தோழரையும் பாராட்டிட வேண்டும் என புதிய மாவட்டச் சங்க நிர்வாகிகளை இம்மாநாடு பணிக்கிறது.  

No comments:

Post a Comment