தூத்துக்குடி அராஜகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே!
நினைந்து பார்க்கவே
நெஞ்சம் நடுங்குகிறது.
தமிழக வரலாற்றில்
கடந்த செவ்வாய் கிழமை மே
22-ஆம் தேதி கறுப்பு செவ்வாய் ஆகிவிட்டது. 11 அப்பாவி பொதுமக்கள், அதில் ஒரு பத்தாம் வகுப்புச் சிறுமியும் கூட, தமிழகக் காவல்துறையினரால்
காக்கைக் குருவிகளைப்
போலச் சுட்டுக் கொல்லப்பட்டு
விட்டார்கள்.
அவர்கள் செய்த குற்றம் அமைதியாகப்
பேரணி போனதுதான். அந்தச் சாதாரண மக்களின் அசாதாரணமான
கோரிக்கை, எங்களை வாழ விடு என்பதுதான்—காற்றை மாசாக்கி, நிலத்தடி நீரை எல்லாம் குடிக்க முடியாமல் நஞ்சாக்கி, மெல்லச் சாகடிக்கும் ஸ்டெர்லைட் தாமிர நச்சு ஆலையை நிரந்தரமாக மூடி – எங்களை வாழவிடு என்பதுதான்.
கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
உள்ளுர் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம்
துவங்கி அன்று செவ்வாய்க்
கிழமை 100-வது நாள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியான பெருந்திரள்
பேரணி.
பொறுக்க முடியாத நிர்வாகமும், அதன் காவல்துறையும் – எல்லாவிதமான
சட்டபூர்மான
வழிமுறைகளையும்
தூக்கியெறிந்து – 13 உயிர்களைச் சுட்டுப் பொசுக்கி தூத்துக்குடியைச்
சுடுகாடு ஆக்கிவிட்டார்கள். தமிழ்ப் பூங்காவைக்
குருதியில்
மூழ்கடித்து
இன்னொரு ஜாலியன் வாலாபாக் ஆக்கிவிட்டார்கள்.
கண்ணீரில் மூழ்கினாலும், கண்டனக் குரல் எழுப்ப கடமை அழைக்கிறது.
NFTE கூட்டணி சங்கங்களின் சார்பில் கடலூர் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு,,,.. 25-05-2018
உணவு இடைவேளை கண்டன ஆர்ப்பாட்டம்
தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்து!
இனி ஒரு துயரம் கூடாது!
ஒன்றிணைந்து
முழங்குவோம்! சுற்றுச் சூழல் காப்போம்! மக்கள் நலம் காப்போம்!
நச்சு ஆலையை நிரந்தரமாக மூடச் செய்வோம்!
தோழமையுடன்
அனைத்துச் சங்க மாவட்டச் செயலர்கள்,கடலூர்.
No comments:
Post a Comment