சிரில் அறக்கட்டளையும்…..
ஐந்து லட்சமும்…….
அன்புள்ளத் தோழர்களே!
வணக்கம். நீங்கள் அனைவரும் சிதம்பரம் மாவட்ட மாநாட்டிற்கு வருகைதர ஆவலுடன் இருப்பீர்கள் என நம்புகிறோம். ஆனால் சில
தோழர்கள் ஒரு சுற்றறிக்கையோடு வலம் வருகிறார்கள். அத்தனைக்குமான பதில்கள் மாநாட்டில்,
அதற்குமுன் சிரில் அறக்கட்டளை வைப்புநிதி ஐந்து லட்சம் பற்றி பரப்பப்படும் அரைகுறை உண்மைகளை
விளக்குவது கடமை எனக் கருதுகிறோம்.
சென்ற மாநாடு நடந்த தேதி
02—03—2013
புதிய
நிர்வாகிகளிடம் கணக்கை ஒப்படைத்த்து 04—08—2014
விரைவான
செயல்பாடு! என்ன பொறுப்பு!
கீழே உள்ளது முன்னாள் நிர்வாகிகள் ஒப்படைத்த 5 லட்சம் நிதிக்கான வங்கிப் புத்தகத்தின் ஜெராக்ஸ் நகல்.
வங்கிப்புத்தகம் இன்றைய மாவட்டச் சங்கத்திடம்தான் உள்ளது என்பது
100 சதவீத அக்மார்க் உண்மைஆனால்
வங்கிக்குச் சென்றால், ”Sorry
Sir, நீங்கள் ஆப்பரேட் செய்ய முடியாது. உங்கள் பெயரில் கணக்கு இல்லை”
எனச் சட்டப்படி சொல்கிறார்கள்.
வருடாவருடம்
தமிழ்விழா நடத்த வேண்டு மென்றால் கணக்குப் புத்தகத்தின் எஜமானர்கள் வட்டிப் பணத்தை
வங்கியிலிருந்து எடுத்துத் தருவார்களா, எப்போது தருவார்கள் என
விழா ஏற்பாட்டாளர்கள் காத்துக்கிடக்க வேண்டும். அதேபோல தற்போதும்
சிதம்பரம் மாநாட்டைச் சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் அறிக்கை வெளியிட்டவர்களின் நோக்கமாக
இருக்க முடியும்.
இனி
முடிவு செய்ய வேண்டிய சங்கத்தின் காவலர்களான உங்கள் பார்வைக்கு
வங்கிப் புத்தகத்தின் நகல்
No comments:
Post a Comment