.

Monday, June 25, 2018

TMTCLU
மாவட்ட செயற்குழு
24-06-2018 அன்று காலை நமது NFTE  தொழிற்சங்க அலுவலகத்தில் தோழர் M.S.குமார் மாவட்ட தலைவர் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.   செயற்குழுவிற்கு வருகை   புரிந்த அனைவரையும் சிதம்பரம் தோழர் E.டெல்லி பாபு, வரவேற்றார்.  தோழர்  A.S.குரு பிரசாத் மாவட்ட செயலர் ஆய்படு பொருளை அறிமுகபடுத்தி உரையாற்றினார். செயற்குழுவில் துவக்கவுரையாக தோழர் V. லோகநாதன் மாநில துணைத் தலைவர்  நாம் எப்படி ,எவ்வாறு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்,  எதிர்கால தேவைகள் பற்றியும், FIXED TERM EMPLOYMENT பற்றியும்  , அதனை எவ்வாறு எதிர்கொள்வதை பற்றியும்  தமது உரையில் பதிவு செய்தார்.

செயற்குழுவுக்கு வந்திருந்த மாவட்ட சங்க, கிளைச் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் S. நடராஜன், R.அகஸ்டீன் , R.மணி விழுப்புரம், தோழர்கள் P.ராஜா, உதயசூரியன்  கள்ளக்குறிச்சி, தோழர் A.பாஸ்கர் ULD,  தோழர் A.சக்திவேல் விருதை, தோழர் விஜயகாந்த் திண்டிவனம், தோழர் தோழர்கள் கிருஷ்ணகுமார், தமிழரசன், ஐயப்பன் சிதம்பரம், தோழர் P.விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டு   தங்களது கருத்துக்களை சுருக்கமாக பதிவு செய்தனர்.  தோழர் G.ரங்கராஜ் மாவட்ட உதவிச் செயலர்   செயற்குழுவின் நோக்கத்தையும், நமது எதிர்கால தேவைகளையும் அறிந்து நாம் எப்படி செயல்பட வேண்டும் என்றும் பதிவு செய்தார்.வாழ்த்துரையில்  தோழர் E. விநாயகமூர்த்தி கிளைச் செயலர், தொலைபேசி கிளை, SEWA-BSNL  மாவட்ட செயலர் தோழர் M. தினகரன் செயற்குழுவின் நோக்கம்  வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாநில இணை பொதுச் செயலர் தோழர் சு.தமிழ்மணி    நமது சங்கம் கடந்து வந்த பாதையும் , நமது செயல்பாடுகளையும் பற்றியும் தெளிவாக விளக்கினார். தோழர் R.செல்வம் மாநில பொதுச் செயலர்    தமது உரையில்  மாநில சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக  செயல்பட்டு வருவதனையும், நீதிமன்ற வழக்கு , தொழிலாளர் நல அலுவலகத்தில் நாம் தொடந்த வழக்குகள் பற்றியும்  தெளிவாக தமது சிறப்புரையில் பதிவு செய்தார்.

 நிறைவாக  தோழர் K.சுந்தர் /CDM செயர்குழுவிற்கு வந்திருந்த அனைவருக்கு நன்றி கூறினார்.


தீர்மானங்கள்

1.     புதிய டெண்டரை காரணம் காட்டி ஆட்குறைப்பு செய்யக் கூடாது
2.     மாத ஊதியத்தில் திடீர் பணப் பிடித்தம் செய்வதை இந்த மாவட்ட செயற்குழு  ஒப்பந்தகாரரை வண்மையாக கண்டிக்கிறது.
3.     2009 ஆண்டு ஊதிய உயர்வின் நிலுவை தொகையை உடணடியாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட  இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
4.     கிளைச் சங்கங்கள் உறுப்பினர் சந்தாவை உடனடியாக வசூல் செய்து மேல்மட்டத்திற்கு அனுப்ப வேண்டும்.
5.     பெரும்பாலான  தொலைபேசி நிலையத்தில் செக்யூரிட்டி தோழர்களை பணியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் அங்கு பணி வழங்கிட இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
6.     ஒப்பந்த ஷரத்தில் உள்ளபடி சம்பள விபரங்கள் அடங்கிய பட்டியலை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட ஒப்பந்தகாரிடம் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று  இச்செயற்குழு கேட்ட்க் கொள்கிறது.
7.     SSA-MERGERல்  ELECTRICAL, CIVIL  பகுதியில் பணிபுரியும்  நிரந்திர ஊழியர்களை இணைத்தது போல  A/C  Plantல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களையும் HOUSE KEEPING  டெண்டரில் இணைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
8.     இந்த ஆண்டு போனஸ் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட மாவட்ட  நிர்வாகத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
9.      நமது ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் தத்தமது வேலைகளை மிகுந்த பொறுப்புணர்வோடும், பணிவோடும், நேர்த்தியான முறையில் செய்யவும், நமது BSNL  நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிட பாடுபட வேண்டும் என நமது தோழர்களை  இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
A.S.குருபிரசாத்
  மாவட்டச் செயலர் -TMTCLU 






No comments:

Post a Comment