.

Tuesday, July 10, 2018

அனைத்து BSNL அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள்  கூட்டமைப்பின்...! போராட்ட அறிவிப்பு...!

BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL) சார்பாக., 26-06-2018 மற்றும் 04-07-2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில்...!  கீழ்கண்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி...!

11-07-2018 அன்று கார்ப்பரேட் அலுவலகம்., மாநிலங்களில் உள்ள CCA அலுவலகம் மற்றும் மாவட்ட தலைநகர்களில் 
ஆர்ப்பாட்டம் நடத்துவது.
24., 25 மற்றும் 26 ஜூலை 2018 ஆகிய தேதிகளில் கார்ப்பரேட் அலுவலகம்., மாநில தலைநகர் மற்றும் மாவட்ட தலைநகர்களில் மூன்று நாட்கள் 
தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது.
என  அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்:
  • BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு., 3-வது ஊதிய மாற்றம் வழங்கிடுக.
  • BSNL வழங்க வேண்டிய ஓய்வூதியப் பங்களிப்பிற்கு அரசு விதிமுறைகளை அமுல்படுத்துக.
  • BSNL முன்மொழிந்த வரைவு அறிக்கையின் படி BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்க.
  • BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய திருத்தம் செய்திடுக.

போராட்டத்தில் அனைத்து சங்கத் தோழர்களும் முழுமையாக கலந்துகொண்டு வெற்றிபெற செய்ய வேண்டுகிறோம். 

No comments:

Post a Comment