.

Saturday, May 18, 2019

கண்ணீர் அஞ்சலி..



            சிதம்பரம் மூத்த தோழர் சுதாகரன் அவர்கள் இன்று 18.5.2019 காலை 5.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் சுதாகரன் சிதம்பரம் பகுதியில் மூத்த தோழர் அண்ணாச்சி ரங்கநாதன் அவர்களுடன் சிதம்பரம் பகுதியில் இணைந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் முதல் முறையாக மஸ்தூர் சங்கத்தை உருவாக்கி அதன் தலைவராக பணியாற்றினார். கிளை, மாவட்ட சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றினார். தோழர் சுதாகரன் கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா. ஸ்ரீ தர் அவர்களின் சித்தப்பா ஆவார்.

      அன்னாரது மறைவினால் வருந்தும் குடும்பத்தாருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது இறுதி சடங்கு நாளை 19.5.2019 காலை 9.00 மணியளவில் நடைபெறும்.

No comments:

Post a Comment