நமது அகில இந்திய தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் (NFPTE ) முன்னாள் பொது செயலாளர் தோழர் டி ஞானையா நினைவு நாள். - ஜூலை 8 , 2017 . தோழருக்கு நமது கடலூர்
மாவட்ட சங்கத்தின் நினைவார்ந்த அஞ்சலிகள் !
அஞ்சல்துறை தந்த அரியதோர்
முத்து.தோழர் டி. ஞானையா 07.01.1921 ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள
நடுக்கோட்டையில் பிறந்தார் .1941 அக்டோபரில் அஞ்சல் துறையில்
எழுத்தராக கரூரில் சேர்ந்தார் . .1942 முதல் 1946 வரை இராணுவ அஞ்சல் சேவையில் சேர்ந்து
பர்மா லிபியா சைப்ரஸ் கராச்சி ஆகிய இடங்களில் பணியாற்றினார் .
திருச்சியில் பணியாற்றிபோது தபால் தந்தி
தொழிற்சங்கத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார் . உதவிக் கோட்ட செயலரில் ஆரம்பித்து
படிப்படியாக உயர்ந்து NFPTE செயலராக 1963 லும், NEPTE மாபொதுச் செயலராக ( Secretary General ) 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .1965 முதல் 1960 வரையிலும் மற்றும் & 1976 முதல் 1978 வரையிலும் NEPTE யின் Secretary General ஆக இருந்தார்.அவர் ஒரு சிறந்த
மார்க்சிய பேரறிஞர்
No comments:
Post a Comment