தோழர்களே
நமது மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த
தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதமாக ஊதிய பட்டுவாடா செய்யாததை கண்டித்து
மத்திய தொழிலாளர் நல ஆனையர் , புதுவை
அவர்களிடம் 26-07-2019 அன்று நமது NFTE-TMTCLU மாவட்ட
சங்கங்களின் சார்பில் மனு
கொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த தொழிலாளர்
நல ஆணையர் நமது நியாயமான கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து , உடணடியாக
08.08.2019 அன்று பேச்சுவார்த்தைகு நிர்வாக தரப்பிலும் ஒப்பந்தகாரர் தரப்பிலும் ,
நமது சங்க பொறுப்பாளர்களை அழைத்தனர்.
இருப்பினும்
நமது நியாயமான கோரிக்கையினை அறிந்து
தொழிலாளர் நல ஆணையர் 06.08.2019 அன்றே பேச்சுவார்த்தைக்கு வருமாறு நம்மையும் , நிர்வாக தரப்பினையும் ,
ஒப்பந்தகாரரையும் அழைத்தார். பேச்சுவார்த்தையில் நமது தொழிலாளர்களின் நிலையை அறிந்து உடனடியாக ஒரு
மாத சம்பளம் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை
எடுத்திட ஒப்பந்தகாரரையும், நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டார். அதுமட்டுமில்லாமல்
தொழிலாளர்களின் நிலையை அறிய Labour Enforcement Officer (LEO) புதுவை
அவர்களின் தலைமையில் நேரடியாக களத்தில் ஆய்வு செய்கிறோம் என உதவி
தொழிலாளர் நல ஆணையர் உறுதியளித்துள்ளார். விரைவில் நமது தொழிலாளர்களின் நலன் காக்கும் என
நம்புகிறோம்.
எனவே நமது
நியாயமான கோரிக்கையின் மீது உரிய கவனம் எடுத்து செயல்பட்ட உதவி தொழிலாளர் நல ஆணையர் அவர்களுக்கு நன்றி...
நமது சங்கத்தின் சார்பில் இரா.ஸ்ரீதர், A.S.குருபிரசாத், M.S.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்
NFTE-TMTCLU
கடலூர்.
No comments:
Post a Comment