இனி நம் உழைப்பால் நன்றி சொல்வோம்!
எந்த வார்த்தையைத்
தேர்ந்தெடுத்து
எப்படி நன்றி
சொன்னாலும்
முழுதாய்ச் சொல்லியது
போல் இல்லை!
இருந்தால் என்ன, இதயத்தில் பொங்கிவரும்
உணர்வுகளை ஒரு
துளி கண்ணீர் காட்டிவிடும்,
கண் பனிக்க நன்றி
சொல்வோம்!
நன்றிதோழர்களே!
அலைக்கழிக்கும்
அன்றாட வாட்ஸ்-அப் செய்திகள்,
அச்சுறுத்தும்
வாழ்க்கை எதார்த்தம் கண்முன்னே,
அத்தனையும் நம்
நம்பிக்கையின் முன்
நில்லாது ஒருபோதும்
என்றுகாட்டி
உணர்வாய் வாக்களித்த
தோழர்களே!
தோழியர்களே!
நன்றி! நன்றி!
சிறப்பாகத் தனியாக
நன்றி சொல்வோம்,
கூட்டணித் தோழர்களுக்கு நன்றி!
அதற்கு முன்
தான் அவர்களுக்கு
எத்தனை நெருக்கடிகள்?
கண்துயில் மறந்து
கடமையாய்
பூப்பூவாய்த் தேனெடுக்கும்
தேனீக்களாய்
சலிக்காது உழைத்த
தோழர்களே,
ஏழுமாதப் பட்டினிச்சுமையோடு
உடன் தோள் கொடுத்த
ஒப்பந்தத்தோழர்களே!
உங்களால் நமதுசெங்கொடி
இன்னும் உயர்ந்து
சிவந்து பறக்கிறது!
மருத்துவமனையில்
புரள முடியா தோழனுக்கும்
தவிர்க்க முடியாது
வெளியூர் சென்றோரும் கூட
எண்ணத்தில் வாக்களிப்பதே
இருந்திருக்கும்!
அதுமட்டுமா, தேர்தலுக்குத்
தேர்தல்
நம் உழைப்பு
ஒன்றுமில்லை என்பதைத்
தாயார் உயிர்பிரிய, உடல்கிடத்தி
வாக்களித்துச்சென்றதோழியரை
வணங்குவதைத்தவிரவார்த்தைஇல்லை!
நம் நன்றிக்கு
உரியவர்கள்
பொதுமேலாளர்
உள்ளிட்ட அதிகாரிகள்,
அவர்களின் தலைகளின்
மீதும் அழுத்தும்
BSNL நெருக்கடிகள் – இருப்பினும்
பொறுப்பாய்
அமைதியாய் நடத்தி
முடித்தார் தேர்தலை!
இனி உறுதியாய், நிதானத்தோடு
இணைந்து BSNL நிமிரச்செய்வோம்,
ஒத்துழைப்பை உறுதிசெய்வோம்!
தேர்தல் முடிந்த
பிறகு எண்ணிக்கை
வாக்குகள் விபரங்கள்
வெறும் எண்கள்தாம்,
நம் எண்ணத்தில்
ஒற்றுமையாய்
எதிர்கொள்வோம்
சவால்களை!
தோழமைவாழ்த்துகளுடன்,
தோழமையுள்ள,
து. குழந்தைநாதன் (மாவட்டச்செயலாளர்)
மாவட்டநிர்வாகிகள், தேர்தல்பொறுப்பாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் சார்பாக
தோழர்களே நடந்து முடிந்த ஊழியர் சரிபார்ப்புத் தேர்தலில் நாம் நமது மாவட்டத்தில் 315 வாக்குகள் (66.45சதம்) பெற்று முதன்மை பெற்றுள்ளோம். மாநில அளவில் 3838 வாக்குகள்(50.33சதம்) பெற்று முதன்மை சங்கமாகவும், அகில இந்திய அளவில் 38535 வாக்குகள் (34.72சதம்) BSNLEU 48029 வாக்குகள்(43.27சதம்).
No comments:
Post a Comment