.
Tuesday, December 31, 2019
Monday, December 30, 2019
Tuesday, December 24, 2019
Monday, December 23, 2019
இரங்கல் செய்தி.....
கடலூர் தோழர்கள் R.கிருஷ்ணமூர்த்தி TT, R.நாகராஜன் TT (retd) ஆகியோரின் தாயாரும், மறைந்த ஓய்வுபெற்ற லைன் இன்ஸ்பெக்டர் ராமநாதன் அவர்களின் மனைவியுமான அனுசூயா அம்மையார் அவர்கள் 22.12.2019 ஞாயிற்றுக்
கிழமை மாலை 4.00 மணி அளவில், வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரின் மறைவில் வருந்தும் தோழர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கடலூர் nfte-bsnl மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையாரது இறுதி நிகழ்வு 23.12.2019
இன்று மாலை 4.00
மணியளவில் கடலூர், உச்சிமேடு, பாலாஜி நகரில் அமைந்துள்ள தோழர் கிருஷ்ணமூர்த்தி இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.Monday, December 2, 2019
ஓய்வூதிய
விண்ணப்பங்கள்
விருப்ப ஓய்வில் செல்லும்
தோழர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தமாக மாநில நிர்வாகம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது....
அதன்படி...விருப்ப
ஓய்வில் செல்லும் ஊழியர்கள்தங்கள் ஓய்வூதிய விண்ணப்பங்களை வழக்கம் போலவே உரிய படிவங்களில்
நிரப்பி தங்களது மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
விருப்ப ஓய்விற்கு
விண்ணப்பித்த தோழர்கள் உடனடியாக அந்தந்த பகுதித் தோழர்களின் உதவியோடு விண்ணப்பங்களை
நிரப்பும் பணியில் ஈடுபடவேண்டும்.
தோழமையுள்ள
D.குழந்தைநாதன்
மாவட்டச்செயலர்
VRS 2019 பற்றிய பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
-குறள்
355
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
-குறள்
423
தோழர்களே! பொருள் உணர்ந்து முடிவு செய்யுங்கள்
தோழமையுடன்,
வெ.லோகநாதன்
மாநிலத் துணைத்தலைவர்
9486107862.
Subscribe to:
Posts (Atom)