BSNL அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு கூட்டம் 06.02.2020 அன்று தோழர்.சந்தேஸ்வர்சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டமைப்புக் கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மட்டங்களிலும் போராட்ட இயக்கங்கள் நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில்,
கோரிக்கைகள்:-
# 2019 டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி மாதங்களின் ஊதியத்தை உடனே வழங்கு. ஒவ்வொரு மாதமும் முறையாக ஊதியம் வழங்கிடு.
11.2.2020 செவ்வாய்க்கிழமை
கடலூர் பொதுமேலாளர் அலுவலக வாயிலில்
மதிய உணவு இடைவேளை
ஆர்ப்பாட்டம்
24.02.2020 அன்று அனைத்து மட்டங்களிலும்
உண்ணாவிரதம்
கோரிக்கைகள்:-
# 2019 டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி மாதங்களின் ஊதியத்தை உடனே வழங்கு. ஒவ்வொரு மாதமும் முறையாக ஊதியம் வழங்கிடு.
# ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக அந்தந்த அமைப்புகளுக்கு உடனே செலுத்திடு.
# BSNLன் 4G சேவைகளை உடனடியாக துவங்கிடு.
# BSNL கடன் பத்திரங்களை வெளியிட அரசின் உத்தரவாதத்தை உடனடியாக வழங்கிடு.
# BSNL கடன் பத்திரங்களை வெளியிட அரசின் உத்தரவாதத்தை உடனடியாக வழங்கிடு.
# FR17(A)-ன் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்புகளை உடனடியாக திரும்ப பெற்றிடு.
# VRS அமலாக்கப்பட்டதன் காரணமாக, ஊழியர்களை தன்னிஷ்டப்படி மாற்றல் செய்யக் கூடாது.
அனைத்துத் தோழர்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுள்ள
D.குழந்தைநாதன்
மாவட்டச்செயலர்
No comments:
Post a Comment