.

Saturday, February 29, 2020

திரு P. சந்தோஷம் B.Tech., M.B.A., I.T.S.
பணி நிறைவு வாழ்த்து
*****
திரு P. சந்தோஷம் அவர்கள் இன்று இலாக்கா பணியிலிருந்து பணி ஓய்வு பெறுகிறார். இவர் நமது மாவட்டத்தின் வளர்ச்சியோடுத் தொலைத் தொடர்பு இலாக்காவின் T.D.M., ஆக, BSNL ஆக மாறிய போது நமது மாவட்டத்தின் பொது மேலாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டவர்.
கூடுதல் பொறுப்பு வகித்தாலும் ஊழியர்களைத் தனிப்பட்ட முறையில் பெயர் சொல்லி அழைக்கும் அளவு ஊழியர்களோடு நெருங்கிப் பழகிய பண்பாளர். தொழிற்சங்கங்களோடு நல்ல உறவைப் பேணியவர். பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு விரைவாக முடிவெடுப்பதிலும் அதனை முழுமையாக நிறைவேற்றுவதிலும் முத்திரை பதித்தவர்.
நமது சங்கம் நடத்திய பல விழாக்களில் பங்கேற்றுச் சிறப்பித்தவர். இவருடைய மனிதநேயம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. நமது மாவட்டத் தோழர்கள் அந்த மனிதநேயத்தை, அவரின் பரிவை நேரடியாக அனுபவித்தவர்கள்நமது இலாக்கா வாகனம் எதிர்பாராத விபத்திற்குள்ளாகி அதில் இலாக்கா பணிக்காகப் பயணம் செய்த தோழர்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செய்தி அறிந்த திரு சந்தோஷம் அவர்கள் உடனடியாகக் கடலூர் கிருஷ்ணா மருத்துவமனைக்கு நடந்து வந்து சிகிச்சைபெறும் தோழர்களை நலம் விசாரித்தார். மேல் சிகிச்சைக்கான உதவிகளைச் செய்ததுடன், அவர்களுக்கான மருத்துவ விடுப்பையும் முயன்று பெற்றுத் தந்தார். என்றும் நம் நன்றிக்குரியவர் அவர்.
திரு சந்தோஷம் அவர்கள் தொலைத் தொடர்பின் பல பிரிவுகளில் தலைமையேற்று பணியாற்றிய பிரிவுகள் ஒவ்வொன்றும் சிறக்கப் பாடுபட்டார்.
தமிழ் மாநிலத் தொலைத்தொடர்பு வட்டத்தின் தலைமைப் பொதுமேலாளராகப் பொறுப்பு வகித்தவர்.
தற்போது சென்னை தொலைத்தொடர்பு வட்டத்தின் தலைமைப் பொது மேலாளராகப் பணிநிறைவு செய்கிறார்.
ஐயா அவர்களின் பணி ஓய்வுக்காலம் சிறந்து விளங்க கடலூர் NFTE மாவட்டச் சங்கம் மற்றும் கடலூர் மாவட்ட ஊழியர்களின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உளம் நிறை வாழ்த்துகளுடன்,
மாவட்டச் சங்கத்தின் சார்பில்,

             இரா. ஸ்ரீதர்.

No comments:

Post a Comment