கூட்டு போராட்டத்தின் வெற்றி
தோழர்களே.. நமது கடலூர் மாவட்டத்தில் கேபிள் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை OUTSOURCING பிரிவில் பணிக்கு அமர்த்த வேண்டி நமது NFTE, BSNLEU தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தோம்.
நமது நியாயமான கோரிக்கைகளை இரண்டு ஒப்பந்தகாரர்களும் நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணிக்கு எடுத்து கொள்வதாகவும், ஏற்கனவே உள்ள சம்பளம் தொடரும் என்றும் உறுதி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து நமது போராட்டங்கள் முடித்து கொள்ளப்படுகிறது. ஆகவே இன்று முதல் (17.05.2020) நமது தோழர்கள் மீண்டும் பணிக்கு செல்லுமாறு NFTE, BSNLEU மாவட்டச் சங்கங்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர் முயற்சி எடுத்திட்ட நமது NFTE, BSNLEU மாவட்ட சங்கத்திற்கும், மூன்று ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட சங்கத்திற்கும், மாநில சங்கத்திற்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். போராட்ட அறைகூவலை ஏற்று போராட்ட களத்தில் நின்ற அனைத்து ஒப்பந்த ஊழியர்களூக்கும், அனைத்து கிளைச் செயலர்களுக்கும் , மாநில , மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் நன்றியினை மனதார தெரிவித்துக் கொள்கின்றோம்.
நமது போராட்டத்திற்கு மேலும் வலுவூட்டும் விதமாக செயல்பட்டு தீர்வினை உண்டாக்க முயற்சி எடுத்த நமது மாநில தலைவருக்கும், மாநில செயலருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்
D.குழந்தைநாதன் மாவட்டச் செயலர்
NFTE, கடலூர்
.
No comments:
Post a Comment