.

Tuesday, November 24, 2020

மத்திய அரசின் IDA முடக்கத்தை கண்டித்து 
நாடு தழுவிய நமது அகில இந்திய சங்கம் விடுத்த  கண்டன ஆர்பாட்டம் அறைகூவல் விடுத்தது. அதனடிப்படையில் நமது சம்மேளன தினமான இன்று 24.11.2020 கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.









Tuesday, November 10, 2020

நிர்வாகத்துடன் சந்திப்பு

NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் 
மற்றும் 
பொருளர் தோழர்.ராஜ்மவுலி ஆகியோர் இன்று 10/11/2020 DIRECTOR (HR) மனித வள இயக்குநரைச் சந்தித்து இலாக்கா வளர்ச்சி மற்றும் ஊழியர் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர். கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
--------
JTO, JE  மற்றும் TT கேடர்களுக்கு விரைவில் இலாக்காத் தேர்வு நடத்திட கோரிக்கை எழுப்பப்பட்டது. விருப்ப ஓய்விற்குப்பின் உள்ள காலியிடங்களுக்கு BSNL வாரியத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் தேர்வு அறிவிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
--------
டெலிகாம் டெக்னீசியனுக்கு இணையான MTS கேடர் உருவாக்கிட கோரிக்கை வைக்கப்பட்டது. உயர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டு
புதிய கேடர் உருவாக்கம் பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பதில் அளிக்கப்பட்டது.
---------
கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. சாதகமான முடிவு எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
------
விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்கள் தொடர்ந்து குடியிருப்புக்களில் வசித்திட அனுமதி அளித்திடவும், குடியிருப்பு வாடகை மிக அதிகமாக உயர்த்தப்பட்டதால் ஊழியர்களுக்கு மிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். வாடகை உயர்வைப் பற்றி மறுபரிசீலனை செய்வதாக மனிதவள இயக்குநர் உறுதி அளித்துள்ளார்.
-------
குஜராத் மாநிலத்தின் தலைமை அதிகாரி NFTE சங்கத் தலைவர்களைச் சந்திப்பதில்லை என்ற தவறான செயல்  சுட்டிக்காட்டப்பட்டது. அவர் தற்போது விடுப்பில் இருப்பதாலும், அவர் பணிக்குத் திரும்பியபின் உடனடியாக சந்திப்பு நடைபெறும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

*🙏 நன்றி: மாநிலச் சங்க whats app பதிவு*

Monday, November 2, 2020



ஒப்பந்த ஊழியர் போராட்டம்-02.11.2020

கடந்த 14 மாதங்களாக BSNL இல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் 01.11.2020 முதல் அனைவரையும் வேலையை விட்டு நீக்கியதை கண்டித்து இன்று 2.11.2020 காலை கடலூர் மாவட்ட BSNL பொது மேலாளர் அலுவலகத்தில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட நிர்வாகம் காவல்துறைகொண்டு இப்போராட்டத்தை முடக்க நினைத்தது. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கடலூர் மாவட்டம் முழுமையுமிருந்து திரளாக ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பிரச்சனையின் தீவிரம் அறிந்து காவல் துறை நமக்கு ஒத்துழைப்பு கொடுத்தது. மாவட்ட நிர்வாகத்தை தொழிற்சங்கங்களுடன் பேச வைத்தது. காவல் துறைக்கு நன்றி!

பின்னர் புதுவையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் உள்ள LEO அவர்களை சந்தித்து நமது கோரிக்கையை விளக்க சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட தோழர்களுடன் இரண்டு வேன்களில் சென்று சந்தித்தனர். நமது கோரிக்கையை ALC அவர்களிடம் விளக்கி பேசப்பட்டது. "வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சம்பளம் வழங்காமல் வேலையை விட்டு நிறுத்துவது நிர்வாகம் எடுத்தமுடிவு நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். மேலும், மத்திய தொழிலாளர் நல ஆணையம் வழங்க சொல்லிய குறைந்தபட்ச சம்பளம் வழங்காத டெண்டரை விட்டது தவறு எனவும் அதனை உடனடியாக நிறுத்த உத்தரவிடுகிறோம்" என LEO உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேலும் தமிழ் மாநில சங்கம் மாநில நிர்வாகத்திடம் பிரச்சனையின் தன்மையை வலியுறுத்தியதின் அடிப்படையில் GM HR அவர்கள் கடலூர் மாவட்ட பொது மேலாளர் அவர்களை சென்னை அழைத்துள்ளார்கள். நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கின்றோம்.