.

Friday, January 29, 2021

உண்ணாநிலைப் போராட்டம் ஒத்திவைப்பு

கடலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 48 ஒப்பந்த ஊழியர்களை மாநில நிர்வாகம் ஒதுக்கிய நிதி அடைப்படையில் 23 ஊழியர்களாக குறைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. நமது nftebsnl மாவட்ட சங்கம் இதனை கண்டித்து நேற்று காலை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து நாளை 30.1.2021 உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 
இன்று நமது போராட்ட அறிவிப்புக்குப் பின் நமது பொது மேலாளர் காலையில் நம்மை அழைத்துப் பேசினார். மாலை துணை பொது மேலாளர் அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் 23 ஒப்பந்த ஊழியர்களுக்கு பதில் 40 ஒப்பந்த ஊழியர்களை பணியில் வைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் ஒத்துக் கொண்டுள்ளது. மீதமுள்ள 8 பேர் மாநில நிர்வாகம் அளிக்கும் கூடுதல் நிதியை பெற்று மீண்டும் பணியில் அமர்த்தப்படுவர். கூடுதல் நிதியைப் பெற்று தர நமது மாநிலச் சங்கம் முயற்சி எடுக்கும். இதுதொடர்பாக மாநிலச் செயலர் தோழர் நடராஜன், மாநில உதவிச் செயலர் தோழர் முரளி ஆகியோர் மாநில நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

இதன் அடிப்படையில் நாளை நாம் நடத்தவிருந்த உண்ணாநிலைப் போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம். போராட்டத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமையுள்ள
D.குழந்தை நாதன்
மாவட்ட செயலாளர்
கடலூர்

Sunday, January 10, 2021

தொலைத்தொடர்பு துறையின் தொழிற்சங்க பிதாமகன், ஓய்வுபெற்ற தோழர்களின் ஓய்வூதியத் திற்கு உத்திரவாதம் பெற்றுத் தந்த 
பென்ஷன் பிதாமகன் 
தோழர் OP.குப்தா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினம், மற்றும் 
தொழிற்சங்க ஞானத் தந்தை தோழர் ஞானையா
அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா 
கடலூர் பொது மேலாளர் அலுவலக வாயிலில் இன்று காலை நடைபெற்றது. 
தோழர் இரா.ஶ்ரீதர் தலைமையில் 
சம்மேளன ச் செயலர் 
தோழர் G.ஜெயராமன், 
கடலூர் மாவட்ட AIBSNLPWA சங்க முன்னோடி தலைவர் தோழர் P.ஜெயராமன் ஆகியோர் தலைவர்களின் புகழ் பேருரை வழங்கினர்.












Wednesday, January 6, 2021

7.1.2020
 தபால் தந்தி இயக்கத்தின் 
அறிவுச் சுடர்
ஞானத் தந்தை 
தோழர் ஞானையா 
அவர்களின் நூற்றாண்டு.
நூற்றாண்டு கடந்த தலைவனின் பெருமையைப் போற்றுவோம்.

Saturday, January 2, 2021

*இறுதி சடங்கு* 

தோழியர் சுசரிதா உடல் உடற்கூறு ஆய்விற்கு பின் அவரது கடலூர்
*கதவு எண்,25. சித்ரா நகர், நத்தவெளி ரோடு, (ரிஜிஸ்டர் ஆஃபிஸ் பின்புறம்) திருப்பாப்புலியூர், கடலூர்  இல்லத்தில் நடைபெறும்.*

இறுதி சடங்கு நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

*தொடர்பு எண்.*
 *தோழியர் கணவர்*
*K.சீதாராமன்,*
*9445785734*