உண்ணாநிலைப் போராட்டம் ஒத்திவைப்பு
கடலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 48 ஒப்பந்த ஊழியர்களை மாநில நிர்வாகம் ஒதுக்கிய நிதி அடைப்படையில் 23 ஊழியர்களாக குறைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. நமது nftebsnl மாவட்ட சங்கம் இதனை கண்டித்து நேற்று காலை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து நாளை 30.1.2021 உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இன்று நமது போராட்ட அறிவிப்புக்குப் பின் நமது பொது மேலாளர் காலையில் நம்மை அழைத்துப் பேசினார். மாலை துணை பொது மேலாளர் அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் 23 ஒப்பந்த ஊழியர்களுக்கு பதில் 40 ஒப்பந்த ஊழியர்களை பணியில் வைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் ஒத்துக் கொண்டுள்ளது. மீதமுள்ள 8 பேர் மாநில நிர்வாகம் அளிக்கும் கூடுதல் நிதியை பெற்று மீண்டும் பணியில் அமர்த்தப்படுவர். கூடுதல் நிதியைப் பெற்று தர நமது மாநிலச் சங்கம் முயற்சி எடுக்கும். இதுதொடர்பாக மாநிலச் செயலர் தோழர் நடராஜன், மாநில உதவிச் செயலர் தோழர் முரளி ஆகியோர் மாநில நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதன் அடிப்படையில் நாளை நாம் நடத்தவிருந்த உண்ணாநிலைப் போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம். போராட்டத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழமையுள்ள
D.குழந்தை நாதன்
மாவட்ட செயலாளர்
கடலூர்
No comments:
Post a Comment