உடன்பாட்டை மீறிய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உண்ணாநோன்பு போராட்டம்
கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும்ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கை குறைப்பு சம்மந்தமாக மாநில நிர்வாகத்துடன் பேசி முடிவெடுப்பதற்கு இன்று காலை (01.02.2021) மாநிலச் செயலாளர் தோழர் நடராஜன், மாநில உதவிச் செயலர் தோழர் முரளிதரன், கடலூர் மேனாள் மாவட்ட செயலாளர் தோழர் இரா. ஸ்ரீதர் ஆகியோர் GMHR,DGM Admn அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் "கடலூர் மாவட்ட நிர்வாகம் கடலூர் வருவாய் பெருக்கத்திற்கோ, சேவையைப் பராமரிப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் அதற்குத் தேவையான நிதி சம்பந்தமாக மாநில நிர்வாகத்திற்கு எந்த விபரமோ, எவ்வித அழுத்தமோ தரவில்லை என மாநில நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
ஆகவே வருகின்ற புதன்கிழமை 03. 02. 2021 அன்று மாவட்ட நிர்வாகத்தை வற்புறுத்தியும், தன்னிச்சையாக உடன்பாட்டை மீறியதையும் கண்டித்து நிதிநிலை சம்பந்தமாக அழுத்தம் தரும் வகையில் ஒத்தி வைக்கப்பட்ட மாவட்டம் தழுவிய உண்ணா விரதம் நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது. ஆகவே, மாவட்ட அளவில் தோழர்கள் திரளாகக் *கடலூர் பொது மேலாளர் அலுவலக வாயிலில்* நடைபெறும் உண்ணா விரதத்தில் கலந்து கொள்ளுமாறு அறைகூவி
அழைக்கிறேன்.
தோழமையுடன்*
*D. குழந்தைநாதன்*
*மாவட்ட செயலர்*
*NFTE-BSNL*
*கடலூர்*
No comments:
Post a Comment