தோற்றத்தில் எளிமை
குரலில் வலிமை
அனைவரிடத்திலும் தோழமை
தன்னலமற்ற தலைமை
கொண்ட கொள்கைக்காக
எதையும் சமரசம் செய்து கொள்ளாத
ரவுத்திர குணம்
கொண்டதனால் நீ
ரகு!
விழுதில்லாவிட்டாலும்
விரிந்து படர்ந்திருந்த
ஆலமரம்
ஆம்
பெரும் புயல்களுக்கு ம்
கிளைகளை கூட அசைக்காது
தன்னில் குடியிருக்கும்
பறவைகளை காத்திட்ட
அதிசய ஆலமரம்!
உன்னால்
நிழல் பெற்றவர்களும்
ஏராளம்!
தன்னலமற்ற தனால்
நீயே
தலைவன்
தன்னிகரில்லா
தலைவன்
தலை வணங்கி அஞ்சலி செலுத்துகிறோம் உமக்கு.
இயக்கத்தின் இயக்கமாக இருந்தவர்
இன்றும் இங்கே இயக்கி கொண்டிருப்பவர்
தோழமை யிலும்
தலைமையிலும்
கொள்கை பிடிப்பிலும்
அவர் வழி நடத்த லே
அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி!
திரு அன்புதேவன்,
AIGETOA
கடலூர். அவர்கள் தோழர் ரகு புகழ் அஞ்சலி கூட்டத்தில் வாசித்த கவிதை
No comments:
Post a Comment