BSNL கொரோனா நிதி
=================
BCF - BSNL COVID FUND
கொரோனா என்னும் கொடிய நோயால் இன்னுயிர் நீக்கும் BSNL ஊழியர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்திட BSNL CORONA FUND உருவாக்கப்பட்டு அதற்கான உத்திரவை BSNL தலைமை அலுவலகம் இன்று 20/05/2021 வெளியிட்டுள்ளது.
அந்த உத்திரவின்படி...
BSNL கொரோனா நிதி 01/04/2020 முதல் 31/03/2022 வரையிலான காலத்தில் அமுலில் இருக்கும். கொரோனோ நோய் போகும் போக்கைப் பொறுத்து கால அளவு நீட்டிக்கப்படலாம்.
7 பேர் உறுப்பினர்களாகக் கொண்ட நிதிக்குழு அமைக்கப்படுகின்றது.
NFTE, BSNLEU, AIGETOA. மற்றும் SNEA
சங்கப்பிரதிநிதிகள் தலா ஒருவரும்,
நிர்வாகத்தரப்பில் மூன்று அதிகாரிகளும்
குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
கொரோனாவால் மரணமுறும் ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் குடும்பத்திற்கு
ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
மேற்கண்ட இழப்பீடு போக இறந்த ஊழியர் குடும்பத்திற்கான ஓய்வூதியப்பலன்கள்
வழக்கம் போல் கிடைக்கும்.
ஊழியர்கள் பங்களிப்பாக
ரூ.10 கோடியும்
நிர்வாகப் பங்களிப்பாக ரூ.10 கோடியும் சேர்த்து தற்போது 20 கோடி ரூபாய் துவக்க கால நிதியாக கையாளப்படும்.
தற்போது ஏறத்தாழ 180 ஊழியர்கள் மரணமுற்றுள்ளார்கள். எனவே 18 கோடி ரூபாய் இப்போதே இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளது.
ஊழியர்கள் பங்களிப்பாக ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். சம்பளப்பிடித்தம் கட்டாயமல்ல. ஊழியர்கள் விருப்பத்தைப் பொறுத்தது.
அடுத்த கட்டப்பங்களிப்பு நிதி தேவையைப்
பொறுத்து முடிவு செய்யப்படும்.
ஊழியர்கள் மரணமுற்ற ஒரு மாத காலத்திற்குள்
அவரது வாரிசுதாரர்கள் உரிய இறப்புச்சான்றிதழ் மற்றும் மருத்துவச்சான்றிதழ்களோடு
விண்ணப்பிக்க வேண்டும்.
20/05/2021 உத்திரவு வெளியிட்ட தேதிக்கு முன்பாக கொரோனாவால் இறந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். அத்தகைய ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 18/06/2021க்கு முன்பாக நிர்வாகத்திடம் உரிய சான்றிதழ்களோடு விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment