தோழர் ஜெகன் நினைவு தினம்
தோழர்களே!
நமது தொழிற்சங்கத்தின் ஒப்பற்ற தலைவன் தோழர் ஜெகன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு தினமான ஜூன் 7 அன்று மதிய உணவு இடைவேளை நேரத்தில் நமது NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளில் மாவட்ட செயலர் தோழர் D. குழந்தைநாதன் தலைமையில், தோழர் ஜெகன் திரு உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் மேனாள் மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் தனது நினைவு உரை நிகழ்த்தினார். தோழர் ஜெகனின் தொழிற்சங்க பண்புகளையும், செயல்பாடுகளையும் மிக அழகாக எடுத்துரைத்தார். அவரது முதல் தொழிற்சங்க வாழ்க்கை கடலூரில் துவங்கியது முதல், அவரது அரசியல், சமூக, வர்க்கப் பார்வை எப்படி இருந்தது பற்றியும், அவரது பாதையில் நாமும் தொடர்ந்து பயணிப்போம் என உரையாற்றினார். அவரது பாதையில் நாமும் நமது பகுதியில் பணிபுரிந்த, பணிபுரிந்து வரும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உதவி செய்திட தோழர் ஜெகன் நினைவு நாளில் முடிவு செய்து முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட தோழியர் ஒருவருக்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
*கடலூரில் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிட உள்ளோம்... கருணை உள்ளம் கொண்ட நண்பர்கள்,தோழர்கள், அதிகாரி பெருமக்கள்* *மனிதம் காத்திட கரம் கோர்ப்போம்.*
மாவட்ட பொருளாளர் A.S. குருபிரசாத் முதல் தவணையாக ரூபாய் 1000 மாவட்ட சங்கத்திடம் வழங்கி துவக்கி வைத்தார். தோழர்கள் A.சகாயசெல்வம். மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R.பன்னீர்செல்வம், தோழர்கள் வீரமணி, K.V.பாலசந்தர், R.சுப்ரமணியன், M.ராஜவேலு. S.பலராமன், TMTCLU மாவட்ட தலைவர் தோழர் M. S குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...
தோழர்களே நமது சமூக கடமை ஆற்றுவதற்கு நமது பங்களிப்பினை செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். கீழ்கண்ட தோழர் குழந்தை நாதன் வங்கிக்கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.
ICICI BANK ACC: NO:
614901502899 IFSC : ICIC0006149
தோழமையுடன் D.குழந்தை நாதன்,
மாவட்ட செயலாளர்.
தோழர் ஜெகன் அவர்களின் நினைவு நாள் புகைப்படம் மற்றும் மனிதம் காப்போம் என்ற வகையில் நிவாரணம் கொடுக்கப்பட்ட நிகழ்வு படங்கள்.
No comments:
Post a Comment