மாநில கவுன்சில் கூட்டம்-சென்னை
புதிய CGM பொறுபேற்று குறைந்த நாட்களில் 25 வது மாநில குழு கூட்டத்தினை ஏற்பாடு செய்தார்.. பொறுப்பேற்று சிறிது நாட்களில் நடைபெற்ற முதல் கூட்டம் புதிய தலைமை பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது.
CIRCLE கவுன்சில் கூட்டத்திற்கு ஊழியர் தரப்பு தலைவரும், NFTE மாநில செயலருமாகிய தோழர் K. நடராஜன் மாநிலக் குழு கூட்டத்தில் சேவை மேம்படுத்துதல் மற்றும் ஊழியர் தரப்பு விவாத குறிப்புகளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். மேலும் நமது மாநில உதவி செயலர் G.S. முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்..
நிர்வாக தரப்பில் முதன்மை பொது மேலாளர் மற்றும் சென்னை CGM அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.. பிற மாவட்டத்தில் இருக்கும் GM, DGM ஆகியோர் WEBEX மூலமாக கலந்து கொண்டனர்...
மேலும் சேலம் மாவட்ட செயலர் தோழர் C. பாலகுமார், வேலூர் தோழர் லோகநாதன், காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் மாரி ஆகியோர் WEBEX ( இணைய வழியாக) மூலமாக கலந்து கொண்டனர். இணைய வழியில் பல இடர்பாடுகள் ஏற்பட்டதனால் அவர்களால் சரியாக கலந்துரையாடலில் கவனம் செலுத்த முடியாமல் போனது வருந்தத்தக்கது.
தோழர் இரா.ஸ்ரீதர் விவாதத்தில் ஊழியர் தரப்பு நியாயங்களை அழகிய தமிழில் எடுத்துரைத்து குறைகளை தீர்வு காண வழி வகை செய்தார்..
தொழிற்சங்க பணிகள் மட்டுமல்லாது, நிர்வாகப் பணிகளிலும், ஊழியர் தரப்பு பிரச்சினைகளில் அதிக அக்கறை கொண்டு சென்னையில் நடைபெற்ற மாநில குழு கூட்டத்திற்கு நேரிடையாக சென்று பங்கேற்றார்.
மாநிலக் குழு கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட நமது அருமை தோழர் இரா.ஸ்ரீதர் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
தோழமையுடன்
D. குழந்தைநாதன்
மாவட்ட செயலர் NFTE
கடலூர்.
No comments:
Post a Comment