.

Monday, November 1, 2021

கடலூர் GM அலுவலகக் கிளை மாநாடு-28.10.2021

கடலூர் GM அலுவலகக் கிளை மாநாடு-28.10.2021 அன்று தோழர் ரகு மாநாட்டு நினைவரங்கத்தில்   தோழர் S.வெங்கட் தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் E.விநாயகமூர்த்தி. R.பன்னீர்செல்வம் ஆகியோர்  விண்ணதிர கோஷமிட, தோழர் M.ராஜவேலு சம்மேளனக் கொடியேற்றினார்.

மாநாட்டின் முதல் நிகழ்வாக தோழர் A.சகாயசெல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழியர் K.சாந்தி அஞ்சலியுரை நிகழ்த்தினார்.

மாநில உதவிச்செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி  துவக்கவுரை நிகழ்த்தி மாநாட்டை துவக்கிவைத்தார். பின்னர் மாநாட்டின் ஆண்டறிக்கை, வரவு செலவு நிதியறிக்கை சமர்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. அறிக்கைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் கிளையின் கீழ்கண்ட நிர்வாகிகள் அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய கிளை நிர்வாகிகள்:

தலைவர்               :      தோழர் S.வெங்கட்

துணைத் தலைவர்கள்       :       தோழியர் S.சுகந்தி

தோழர் J.ஜலதரன்

தோழர் D.நாகராஜன்

செயலர்                :      தோழர் A.சகாயசெல்வன்

பொருளாளர்                :      தோழர் A.அப்துல்கரீம்

உதவிப்பொருளாளர்        :       தோழர் M.ராஜவேலு

அமைப்புச்செயலர்கள்      :       தோழர் K.மகேஷ்வரன்

தோழர் T.கலைச்செல்வன்

தோழியர் S.புவனேஷ்வரி

தோழியர் K.சாந்தி

மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநிலச் சங்க உதவித்தலைவர் தோழர் V.லோகநாதன், மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், மேனாள் மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், மாவட்டச் செயலர் தோழர் D.குழந்தைநாதன், மாவட்டப் பொருளர் தோழர் A.S.குருபிரசாத், மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் R.பன்னீர் செல்வம், மற்றும் மேனாள் கிளைச் செயலர் தோழர் S.இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தமிழ் மாநிலச் செயலர் தோழர் K.நடராஜன் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப்பேசி சிறப்புரையாற்றினார்.

மாநாட்டிற்கு முன்னதாக கடலூர் மாவட்ட அலுவலகத்தில் JCM உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

மாநாட்டில் கிளைத் தோழர்கள், நெல்லிக்குப்பம், விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி தோழர்கள் உட்பட ஓய்வு பெற்ற தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கிளைமாநாட்டின் தீர்மானம் வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்கப்பட்டது. இறுதியாக தோழர் அப்துல்கரீம் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

கிளை மாநாட்டுத் தீர்மானங்கள்:

v GM அலுவலகத்தின் ஒரு பகுதியும் CSC பகுதியும் தனியாருக்கு வாடகைக்கு விடும்முன்னர் தொழிற்சங்கத்திடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட வேண்டும்.

v GM அலுவலகம், CSC பகுதிகளில் உள்ள கழிவறைகள் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. முறையான பராமரிப்புத் தேவையென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

v CSCயில் உள்ள மின்விசிறிகள், மின்விளக்குகள் போதுமான அளவில் இல்லை. இதனால் வாடிக்கையாளர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். போதுமானவைகளை நிறுவிட இம்மாநாடு நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறது.

v ஊழியர்களின் மருத்துவ சிகிச்சைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போடப்பட்ட மருத்துவமனைகளுடன் புதுச்சேரி PIMS மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளையும் இணைக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

v GM, CSC அலுவலகங்களில் பணிபுரிய பிராட்பேண்ட் போதுமான வேகத்தில் இல்லை. ஆகவே பணிபுரிவதற்கு ஏதுவாக அலுவலகத்தில் அதிவேகத்தில் உள்ள FTTH இணைப்பினை அளிக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

v கோவிட் காலம் இன்னமும் முடிவடையாத சூழ்நிலையில் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி அலுவலகத்தில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி மற்றும் சானிடைசர் ஆகியவைகளை அளிக்க ஏற்பாடு செய்ய இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

v வாடிக்கையாளர்கள் CSCயில் தொலைபேசி, இதர கட்டணங்களை செலுத்திட swipping machine வசதியினை ஏற்படுத்தித் தருமாறு மாநாடு வேண்டுகிறது.

v மருத்துவக் காப்பீடு வசதி அறிவிக்கப்பட்டு இன்னும் அமுலுக்கு வராமல் இருக்கின்றது. இவ்வசதியை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநிலச் சங்கங்களை இக்கிளை மாநாட்டின் மூலம் கேட்டுக்கொள்கிறது.










தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் – கடலூர் GM அலுவலகக் கிளை


No comments:

Post a Comment