.

Wednesday, May 11, 2022

தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்

மாவட்டச் சங்கம், கடலூர்-01.

 

மாவட்ட செயற்குழு

 10.05.2022 அன்று காலை 10:00 கடலூர் மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் தோழர் G.ரங்கராஜு மாவட்ட துணைத் தலைவர் தலமையில் மிகச் சிறப்பாக துவங்கியது. சம்மேளனக் கொடியினை தோழர் M.ராஜவேலு அவர்கள் ஏற்றி வைத்தார். துவக்கவுரையாக நமது மாநில  உதவிச் செயலர்  அருமை தோழர் P.சுந்தரமூர்த்தி உரையாற்றினார். அஞ்சலி உரையினை தோழர் D.ரவிச்சந்திரன் நமது மாவட்ட உதவிச் செயலர் இன்னாள் வரையில் உயிர் நீத்த அனைவருக்கும் அஞ்சலியினை செலுத்தினார். மேலும் ஆய்படு பொருளினை மாவட்ட செயலர் தோழர் D.குழந்தைநாதன் அறிமுகம் செய்து வைத்து  ஊழியர்களின் மாற்றல் பிரச்சனைகள், ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பிரச்சனைகள், OUT SOURCING முறைகேடுகள் மற்றும் ,CLUSTER  பிரச்சனைகள், வரவிருக்கும் ஊதிய மாற்றம் , சங்க தேர்தல் மற்றும் அமைப்பு நிலை பற்றியும் மிக தெளிவாக தனது உரையில் பதிவு செய்தார்.

மேலும்  கருத்துரையில் மாவட்டத்திலிருந்து வருகை புரிந்த மாவட்ட சங்க , கிளைச் சங்க நிர்வாகிகள் தங்களது பகுதியில் உள்ள பிரச்சனைகளை குறித்து பேசினார்கள். குறிப்பாக ஒப்பந்த ஊழியர்களின் சம்பள நிலுவை, கொடுக்கப்பட வேண்டிய ஊதியம், பணித் தன்மை குறித்தும் பேசினார்கள், அதே போல் நிரந்திர ஊழியர்களின் பணி பாதுகாப்பு , சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்திற்கும் மாவட்ட செயலர் பதிலளித்தார்.

 மாவட்ட சங்க தோழர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட செயற்குழுவில் நடைபெற்றது. அதற்கு மேனாள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் தலைமை தாங்கினார்.  குறிப்பாக மாவட்ட துணைத்தலைவர் தோழர் R.அகஸ்டீன், மாவட்ட உதவி செயலர் தோழர் P.மாயகிருஷ்ணன், மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் K.அம்பாயிரம் ஆகியோரின் செயல்பாடுகளை குறித்து மிக தெளிவாக எடுத்துரைத்து அவர்களை வெகுவாக பாராட்டினார். 

  திருச்சி கீரனூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட மாநில சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு நிகழ்வும் நடைபெற்றது. மாநில துணைத் தலைவரும் , விளையாட்டு வீரருமான அருமைத் தோழர் A.சகாய செல்வன் அவர்களுக்கு TMTCLU  மாநில  பொதுச்செயலர் தோழர் R.செல்வம் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.  மாநில உதவிச் செயலர் தோழர் P.சுந்திரமூர்த்தி அவர்களுக்கு நமது மேனாள் சம்மேளனச் செயலர் தோழர் G.ஜெயராமன் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்  விழுப்புரம் பகுதியினை சார்ந்த தோழியர் S.ராணி அவர்களுக்கு நமது  சம்மேளனச் செயலர் தோழர் P.காமராஜ் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். மேலும் புதியதாக தேர்வு செய்யபட்ட அனைத்து மாநில  சங்க நிர்வாகிகளுக்கு நமது மூத்த தோழர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 மாவட்ட செயற்குழுவிற்கு வருகை புரிந்த நமது  மேனாள் சம்மேளனச் செயலர் தோழர் G.ஜெயராமன், மேனாள்  மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் அவர்களும், மேனாள் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.லோகநாதன் ஆகியோர் மாவட்ட சங்க செயல்பாடுகள், இன்னும் செயல்பட வேண்டிய பயணத்தினையும் சிறப்பாக தங்களது வாழ்த்துரையில் பதிவு செய்தனர்.

இறுதியாக நமது சம்மேளனச் செயலர் தோழர் P.காமராஜ்  மைசூரில் நடைபெறவுள்ள நேரடி நியமனம் பெற்று வேலைக்கு வந்தவர்களுக்கான CONVENTION நமது மத்திய சங்கத்தின் சார்பில் நடைபெறுகிறது , அதில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் நமது நிர்வாகத்தின் இன்றைய செயல்பாடுகள், CLUSTER maintenance, FTTH, OFC OUTSOURCING, ஊதிய மாற்றம். சங்க அங்கீகார தேர்தல் ஆகியவற்றினை பற்றி மிக தெளிவாக பதிவு செய்தார்.


இறுதியாக மாவட்ட பொருளாளர் A.S.குருபிரசாத் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

 தோழியர் B.விஜியலஷ்மி அவர்கள் நமது மாவட்ட செயற்குழுவிற்கு  வருகை புரிந்த அனைத்து தோழர்களுக்கும்,  காலையில் டீ, வடை வழங்கினார். தோழியருக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

 தோழமையுடன்

NFTE- மாவட்ட சங்கம், கடலூர்.


















































No comments:

Post a Comment