.

Saturday, January 8, 2011

Com Mathivanan's Speech on 07/01/2010

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!

உங்களை இதன் வழியே சந்திப்பதில் மகிழ்ச்சி!. 


07-01-2011 அன்று மாலை 5.30 மணிக்கு இடி முழக்கமென தனது உரையைத் துவக்கினார் தோழர் மதிவாணன். 350-க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்து கொன்டனர். கூட்டம் முடியும் வரை அனைவரும் கட்டுண்டது போல அவரது உரையினை கேட்டனர். அவரது உரையின் சில முக்கிய அம்சங்கள்: 




               ("ப்ளாக் ஸ்பாட்"  துவக்கம்  தோழர் மதிவானான்)

           அதிகாரம் இல்லாதபோது இலாபம் வந்தாலும் வராவிட்டாலும் போனஸ் - கொடுபடா ஊதியம் போனஸ் என்று முழங்கிய நம்பூதிரி - அபிமன்யூ கோஷ்டியினர் அங்கீகாரம் பெற்றதும் இலாபம் வந்தால் மட்டுமே போனஸ் எனற் - எந்த சித்தாந்த சிந்தனையும் இல்லாத கேவலமான உடன்பாட்டினை போட்டனர்.  போனசே இல்லாத வருடங்கள் தான் இவர்களது சாதனை.


ஊதிய உடன்பாட்டில் 78.2% D.A Merger என்பதில்  கோட்டைவிட்டுவிட்டு 68.8% கொடுத்தால் போதும் என மோசடி ஒப்பந்தம் போட்டார் நம்பூதிரி.


MRS திட்டத்தினையும் முடமாக்கிவிட்டார்.


திரு.ராஜா பதவியில் இருக்கும்பொது மயான அமைதி காத்துவிட்டு - இப்போது 2G பற்றி எழுதுகிறார் இந்த இரட்டை வேட நம்பூதிரி-அபிமன்யூ கோஷ்டியினர். 
2G ஊழலை வெளிக்கொணர்வதில் நமது பங்கு என்ன என்பதனை நாடே அறியும். 


பதவி உயர்வு திட்டதிலும் சிந்தனையற்று 1-10-2004 முதல் 31-3-2008 வரை பதவி உயர்வு அரியர்ஸ் வேண்டாம் என கேடுகெட்ட ஒப்பந்தம் போட்டு ஊழியர்க்ளுக்கு 42 மத அரியர் இழப்பு ஏற்படுதினார். (தோழர் குப்தா Cadre Restructuring கையெழுத்திட்டது 1996 ல்.  ஆனால் அரியர் பெற்றுத்தந்தது 1993 முதல்)


                                                    




                                                           (திரண்டிருந்த தோழர்கள்


போராட தயங்குவர் நம்பூதிரி-அபிமன்யூ கோஷ்டியினர்.  தப்பி தவறி போராட்ட அறிவிப்பு வந்தலோ எந்தவிதமான உடன்பாடும் இல்லாமல் போரட்டத்தினை வாபஸ் பெறுவதில் கில்லாடிகள்.


போராட  வக்கற்ற - பேச்சுவர்த்தை நடத்த திராணியற்ற இவர்களது இரட்டை 
வேடத்தினையும், சரண்டர் போக்கினையே தத்துவமாக கொனண்டுள்ள இவர்கள்து "யோக்கியதாம்சங்களை" இந்தியா முழுவதும் ஊழியர்கள் நன்கு உண்ர்ந்துள்ள்னர்.   SNEATTA உள்ளிட்ட 9 சங்கங்கள் கொண்ட வலுவான கூட்டணியினை உறுவாக்கியுளோம்.


இம்முறையும் நம்பூதிரி-அபிமன்யூ அங்கீகாரம் பெற்று விட்டால் BSNL -ம் அதன் ஊழியர்களும் மீளமுடியாத பள்ளத்தில் BSNLEU-வினால் தள்ளப்படுவர்.  
இத்தேர்தல் நமக்கு கிடைதுள்ள வாய்ப்பு.  நமது உறுப்பினர்கள் தேனிக்கள் போல பணியாற்றி BSNLEU-பதவிக்கு வந்துவிட்ட்டால் நேர்ந்துவிடும் அபாயங்கள் பற்றி ஒவ்வொரு உறுப்பினர்களிடையேயும் எடுத்துரைக்க வேண்டும். வெற்றிக்கனியினை பறிக்கும் வரை நாம் ஒரு வினாடி கூட ஓயாமல் விழிப்பாக இருக்கவெண்டும்.  BSNLEU பயன்படுததகூடிய "அனைத்து வகையான" யுக்திகளையும் நாம் முறியடிக்க வேண்டும்.

வெற்றி கிட்டும்வரை ஓயாமல் பாடுபடுவோம். போராட்ட வாழ்த்துகளுடன்,


தோழமையுடன்,
P.சுந்தரமூர்த்தி.

1 comment:

  1. தோழர் சுந்தரமூர்த்திக்கு நெஞ்சு நிறை வாழ்த்துக்கள். அற்புதமாக கடலூர் வலைதளத்தை துவக்கியிருக்கிறீர்கள். உங்கள் பணிக்கு உறுதுணையாகவும், செழுமைப்படுத்தும் பணியில் ஆற்றலோடும் வலம் வரும் தோழர்களையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

    எமது தஞ்சை வலைத் தளமும் கடலூர் வலை தளத்தை வாழ்த்தி மகிழ்கிறது.

    அன்புடன்,

    s . சிவசிதம்பரம்.

    பட்டுக்கோட்டை.

    ReplyDelete