.

Thursday, February 10, 2011

MRS - "MISSION IMPOSSIBLE?"


MRS திட்டத்தின் கீழ் "மாநில அலுவலகத்திற்கு '  CLAIM BILL ' அனுப்பபபடும் போது அனுசரிக்க வேண்டிய முறைகள் பற்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு - மாநில 
அலுவலத்தின் "அறிவுறுத்தல்" கள் கீழே தொகுக்கப் பட்டுள்ளன:


(அ) அனுமதிக்கப்பட்ட மருத்துவமணைகளில்,உள் நோயாளிகளாக 
        சிகிச்சை பெற்ற , செலவு (PAY+DA) வைப்போல இரு மடங்கு 
       ஆகியிருந்து, அத்தகைய 'CLAIM" மாநில அலுவலகத்திற்கு 
       அனுப்பப்படும் போது,  கீழ்க்கண்டவை உறுதி செய்யப்பட வேண்டும்.


1. மாவட்ட நிர்வாகம்-நோயாளி எவ்வளவு நாள் மருத்துவ மணையில்  
    தங்கியிருந்தார்    என தெளிவாக தெரிவிக்க வேண்டும்.


2. இவருக்குத்தான் சிகிச்சையளிக்கப்பட்டது என மருத்துவர் சான்றுரைத்த  
    MRS   கார்டின் காப்பி இணைக்கப்பட வேண்டும்.


3. உள் நோயாளியாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள்  சிகிச்சை    
    பெற்றிருந்தால்,    உரிய அதிகாரி, சிகிச்சை அளிக்கப்பட்டுக்  கொண்டிருக்கப்படும்   
    நாட்களில், மருத்துவ மணைக்குச் சென்று,    MRS  கார்டினை சரிபார்த்து,     
    குறிப்பிட்ட படிவத்தில், ரிப்போர்ட் செய்திருக்க வேண்டும்.


4. சிகிச்சை 10 நாட்களுக்கு மேற்பட்டால் - மருத்துவரின் சான்றும், மாவட்ட 
    நிர்வாகத்தின் அனுமதியும் தேவை.


5. இம்மாதிரியான "CLAIM"  கணக்கதிகாரியினால் முழுமையாக "செக்      
    செய்யப்பட்டு", 'அட்டெஸ்ட்" செய்யப்பட வேண்டும்.


6. பொது மேலாளர் மற்றும் IFA -"ரெகமண்ட்"  செய்திருக்க வேண்டும்.


7.  'CLAIM'  ஆறு மாத்திற்குள்ளாக செய்யப்பட வேண்டும்.  கால தாமதமான 
     அனைத்து   ' CLAIM' களும் நிராகரிக்கப்படும்.


(ஆ)  அங்கீகரிக்கப் படாத மருத்துவ மணைகளில் - அவசர நிலை கருதி -   
         சிகிச்சை  பெற்றிருந்தால்:


1. சிகிச்சையளித்த மருத்துவரிடமிருந்து, நோயின் தன்மை மற்றும் 'அவசர 
    நிலை'    குறித்த சான்றுரை.


2. அங்கீகரிக்கப் படாத மருத்துவ மணைகளில் - அவசர நிலை கருதி -
    அட்மிட்   செய்தது குறித்து   நிர்வாகத்திற்கு சம்பத்தப்பட்ட ஊழியர் 
    அளித்த   'INTIMATION 'கடிதம்.


3. உரிய அதிகாரி 'மருத்துவ மணைக்குச் சென்று பார்த்த 'ரிப்போர்ட்'.


4. நோயாளியின் இல்லத்திலிருந்து - அங்கிகரிக்கப்பட்ட மருத்துவ மணை
     எவ்வளவு தூரத்தில் உள்ளது. 


    நோயாளியின் இல்லத்திலிருந்து - அட்மிட் ஆன மருத்துவ மணை
     எவ்வளவு தூரத்தில் உள்ளது. 


    நோயாளியின் இல்லத்திலிருந்து - வேறு ஏதாவது மருத்துவ மணை 
    இருப்பின்  அந்த மருத்துவ மணையின் தொலைவு.


5.  மாவட்ட நிர்வாகம், "CLAIM" அனுமதித்து மாநில அலுவலகத்திற்கு -
   "ரெகமண்ட்"  செய்திருக்க வேண்டும்.


6. இதுவரை மொத்தமாக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட / 
    அனுமதிக்கப்படாத மருத்துவ மணைகளில்     CLAIM செய்யப்பட்ட 
    தொகை யினையும்   குறிப்பிடப்பட வேண்டும்.


7. இவருக்குத்தான் சிகிச்சையளிக்கப்பட்டது என் மருத்துவர் சான்றுரைத்த 
    MRS   கார்டின் காப்பி இணைக்கப்பட வேண்டும்.


(இ)  வேறு மா நிலங்களில் சிகிச்சை பெற்றிருந்தால்:


      மேற்கண்ட (7) அம்சங்கள் தவிர,  அந்த மாநிலத்தின் 'CGM'
      அவர்களிடமிருந்து  பெறப்பட்ட 'அனுமதிக் கடிதம்'


(ஈ) 'அப்போலோ - கிரீம்ஸ் ரோடு சென்னை', 'வேலூர் CMC', கேன்ஸர்    
        இன்ஸ்ட்டிடியூட்-அடையார்', 'MMM-சென்னை', 'சங்கர நேத்ராலயா 
       சென்னை'  போன்ற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ  மணைகளில்  சிகிச்சை  
       பெற்றிருந்தால்:


      மேற்கண்ட (7) அம்சங்கள் தவிர,  மாவட்ட நிர்வாகத்திற்கு ஊழியரின் 
       மருத்துவ    மணையில் சேர்ந்தது பற்றிய தகவல் கடிதம்.


(உ)  புற நோயாளியாக சிகிச்சை பெற்றிருந்து - அனுமதிக்கப்பட்ட 
        தொகையினுக்கு    மேல் 'CLAIM'  செய்யப் பட்டால்:


        'CLAIM'  மாவட்ட நிர்வாகத்தால் முழுமையாக பரிசீலக்கப்பட்டு- 
          அனுமதிக்கப்பட்டு - 'ரெகமண்ட்'  செய்யப்பட்டிருக்க வேண்டும்.
         Priscription and Bills in original  வேண்டும். மற்றும் சிகிச்சியளித்த  மருத்துவரின்  
         சான்றுரை.


(ஊ)  இது தவிர பொதுவான அறிவுறுத்தல்களில் முக்கியமானவை:
          'ஸ்டண்ட்' வைக்கப்பட்டிருந்தால் அந்த 'ஸ்டண்ட்' பேட்ச் நெம்பர்,   
          'ஸ்டண்ட்'    வெளி உறை, அதன் ஸ்டிக்கர்  உட்பட அனைத்து 
           விவரங்களும்   
          நமது விளக்கம் (ஸ்டண்ட்' என்பது இருதய இரத்த குழாய் 
         அடைப்பு  டைப்புகளை நீக்க -  குழாயினுள் வைக்கப்படும் ஒரு 
          உபகரணம்).
         ===============================================================
               நமது சங்கம், தோழர். குப்தா அவர்களின் முயற்சியின் காரணமாக 
               பெற்றிட்ட " MRS திட்டம் " எப்படியெல்லாம் நீர்துப்போய் விட்டது -  
               பார்த்திர்களா?  அங்கீகாரத்தில் உள்ளோர் இதைப்பற்றி ஏதேனும் 
              கவலை கொள்வார்களா    இல்லை NFTE -  சங்கத்தை வசைமாரிப் 
               பொழிவதிலே காலத்தை கழிப்பார்களா? 
         ================================================================




              



1 comment: