.

Friday, April 1, 2011

(1) 29/03/2011 அன்று, மத்திய தொழிற்சங்கமான AITUC முயற்சியில் மத்திய அமைச்சர் கபில்சிபல் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது. AITUC சார்பாக 
குருதாஸ் குப்தா, NFTE சார்பாக தோழர்கள் சந்தேஸ்வர் சிங் மற்றும் இஸ்லாம் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர். NFTE-BSNL க்கு அங்கீகாரம் வழங்குவது பற்றி ஆழமான விவாதம் நடைபெற்றது. 5-ஆவது சரிபார்ப்பு தேர்தலில் எந்தவொரு சங்கமும் 51% ஓட்டுக்கள் பெறாத நிலையில் BSNL நிர்வாகம் BSNLEU & NFTE-BSNL ஆகிய இரு சங்கங்களுக்கும் அங்கீகாரம் அளித்திருக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. இது போன்ற சூழ் நிலையில் அங்கீகாரம் குறித்து சென்னை உயர் நீதி மன்றம், Neyveli Lignite Corporation வழக்கில், வழங்கியிருக்கும் தீர்ப்பும்  எடுத்துக் காட்டப்பட்டது.  தகுந்த முடிவெடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.



(2) இதே நாளில் Labour Ministry,  பொதுத் துறை நிறுவனங்களில் நிலவும் அங்கீகாரப் பிரச்சினை குறித்து விவாதிக்க, அனைத்து மத்திய தொழிற்சங்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது. AITUC, CITU உட்பட பல சங்கங்கள் கலந்து கொண்டன. இந்த சந்திப்பில் கீழ்க்கண்ட அம்சங்களில் கருத்தொற்றுமை (consensus) ஏற்பட்டது.


அ. பழமையான அங்கீகார விதிகள், தற்கால சூழ் நிலை கருதி மாற்றி 
       அமைக்கப்பட வேண்டும்.


ஆ. ஒன்றிற்கு மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கலாம்.


இ. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு-ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகளில் 
      அனத்து சங்கங்களுக்கும் பெற்ற ஓட்டுகள்   அடிப்படை யில் விகி   
      தாச்சார முறைபடி பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும்.




(நமது நிறுவனத்திலும் விரைவில் அங்கீகார விதிகளில் மாற்றம் வரும் 
என நம்புவோம்)

No comments:

Post a Comment