.

Tuesday, March 29, 2011

மகளிர் தின விழா


மகளிர் தின விழா, கடலூர் பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் 29/03/2011 அன்று
தோழியர் விஜயலட்சுமி (மாவட்ட உதவித் தலைவர்)  அவர்களது தலைமையில் சிறப்புற நடந்தது. 



தோழியர் மேகலா அவர்கள் வரவேற்புரையாற்றினார். 

துணைப்பொது மேலாளர் திருமதி. ஜெயந்தி அபர்ணா அவர்கள் சிறப்புரை  நிகழ்த்தினார்.  தற்கால பெண்கள் 'புன்னகை மட்டும் அணிந்து' , 'பொன் நகை' அசையினை விட்டுவிடுமாறு தனது உரையினில் கூறினார். 

தோழியர் கவி.மனோ (தலைமை ஆசிரியை, ஆலப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி) அவர்கள் கருத்துரை நல்கினார்.  அவர் தனது உரையில்-இயல்பான நடையில் - பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளது குறித்தும், குடும்ப சூழ் நிலையில், பெண்கள் எவ்வாறு சிறப்புற நடந்து கொள்ள இயலும் என்பது குறித்தும் பேசினார்.


(தோழியர் கவி மனோ உரையாற்றுகிறார் )



தோழியர் பார்வதி நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது. 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெய்வேலி போன்ற பகுதிகளிலிருந்து வந்திருந்து 
கூட்டத்தினை சிறப்பித்த  அனைத்து தோழர்கள், தோழியர்களுக்கும், 
நமது அழைப்பினை ஏற்று பங் கேற்ற அனைத்து தோழியர்கள், FNTO மாவட்டச்செயலர் தோழர் ஜெயபால்,   மற்றும் பங்கேற்ற அதிகாரிகள் அனைவருக்கும் 
 நமது நெஞ்சு நிறை நன்றி. 
( பங்கேற்ற மகளிர் - ஒருபகுதி  )


No comments:

Post a Comment