ஒரு மிகப் பிரபலமான நிறுவனத்தின் தலைவர் ரயிலில் பிரயாணம்
செய்துகொண்டிருந்தார். சக பயணி ஒருவர் அவரிடம் பவ்வியமாக வினவினாராம்.
"சார்... உங்களது PRODUCTS-ஐ மட்டும்தான் மக்களில் பெரும் பாலோர்
உபயோகிக்கின்றனர்."
"ஆமாம்"
"உங்களுக்கு போட்டியே இல்லை என்பது தானே சார் நிலவரம்?"
"சரியாகச் சொல்கிறீர்கள்"
"உங்களக்கு அடுத்த போட்டியாளர், கண்ணிற்கே தென்படாத தூரத்தில்
தானே இருக்கிறார்..!"
"அதற்கென்ன இப்போது?"
"மார்க்கட் முழுவதுமாக உங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் போது
நீங்கள் எதற்காக விளம்பரத்திற்கு இவ்வளவு செலவு செய்கிறீர்கள்?
நிமிஷத்திற்கு ஒரு advertisement வருகிறதே?"
"நல்லது..நண்பரே.. இப்போது நமது ரயில் எவ்வளவு வேகத்தில் போய்க்
கொண்டிருக்கிறது?"
"100 மைல் வேகம் இருக்கு சார்.."
"ரயில் தான் முழுவேகம் பெற்று விட்டதே.. ரயில் இஞ்சினை ஆஃப் செய்து
விட்டால் என்ன?
"அதெப்படி சார்...? கொஞ்ச நேரத்தில் ரயில் நின்று விடுமே சார்..!"
"வியாபாரமும் அப்படித்தான் நண்பரே..நான் விளம்பரம் எனும் இஞ்சினை
ஆஃப் செய்து விட்டால் எனது வியாபாரமும் கொஞ்ச நாளில் நின்று
விடும்....புரிகிறதா?"
கேள்வி கேட்ட நபர்..அசடு வழிந்துகொண்டு சென்று விட்டாராம். இது கற்பனை உரையாடல் அல்ல..
மார்க்கட்டில் முதலில் இருக்கும் ஆளே இப்படி சொல்லும் போது, நமது
நிறுவனம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? செய்திருக்க வேண்டும்?
BSNL மார்க்கட் ஷேர் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் தானே?
தனியார் நிறுவனங்கள் எப்படியெல்லாம் விளம்பரிக்கிறார்கள்?
அதுவும் MNP வந்தபின் ஆர்ப்பாட்டமான, அசத்தும் விளம்பரங்கள்.
நமது விளம்பரங்கள் பேப்பரிலும்-டி.வி யிலும் சுத்தமாக நின்று விட்டன.
MNP-நடைமுறை படுத்தப் பட்டபின்னும்-நாம் தூக்கத்தை விட்டு எழுந்த
பாடில்லை.
No comments:
Post a Comment