தொலைபேசித்துறை P&T இலாக்காவின் ஒரு அங்கமாக இருந்தது.
மாறி வரும்
சூழ் நிலையில் DOT ஆக தொடர்வது இலாக்கா வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது என BSNL ஆக மாற்றப்பட்டோம்..
கடந்த இருபது ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பெரும் புரட்சியே ஏற்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாத அளவிற்கு, தொலைபேசி-தகவல் தொழில் நுட்பத்துறை அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. பேச்சு (VOICE) ஒன்றே முக்கியமானதாக இருந்த நிலை போய் - டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் விளைவாக, VOICE என்பது, தகவல் தொழில் நுட்பத்தின் ஒரு
சிறிய அங்கமாக மாறிவிட்டது. வங்கிகள், ரயில்வே போன்று - ஒரு துறை
பாக்கி இல்லாமல் அனைத்து செக்டார்களும் "தகவல் தொழில் நுட்ப வலையில்" இணைந்தன.
இந்த தகவல் தொழில் நுட்ப புரட்சியினை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மார்க்கட்டில் முதல் நிறுவனமாக இருந்திருக்க
வேண்டிய BSNL -ன் நிலை என்ன?
கோளாறு எங்கே துவங்கியது?
மில்லாத 'போட்டிகளுக்கு மத்தியில் " வளர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுவும் எப்படிப்பட்ட போட்டி? CUT THROAT COMPETITION என்று சொல் வார்களே, அத்தகைய போட்டி.
இந்த கடுமையான போட்டியினை சந்திக்க நமது நிறுவனம் தயார் நிலையில் இல்லை !
நமது CMD -க்கள் எவரும் "மார்க்கட் ஸ்பெஷலிஸ்ட்" இல்லை!
மாறாக 'கோப்புகளில் ஊறிப்போனஅரசாங்க உயரதிகாரிகள்.
இவர்களின் தடித்த தோல்களுக்கு நாம் மார்க்கட்டை விட்டு
வெளியேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறோம் அல்லது மார்க்கட்டை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணரவே ஆண்டுகள் பல தேவைப்பட்டது!
CMD முதல் GM வரை எவரும் BSNL-ஆட்கள் இல்லை! இவர்களுக்கு நிறுவன வளர்ச்சியில் என்ன அக்கறை இருக்க முடியும்? 'விதுரன்' போல வயிற்றுக்கு BSNL -ஐயும், விசுவாசத்தினை தனியாரிடமும் வைத்திருந் தார்கள்.
இவர்களுக்கு மார்க்கட் நுட்பங்களும்-அதன் மேலாண்மையும் பிடிபடவே இல்லை!
எதற்காக BSNL ஆக மாற்றப்பட்டோமோஅந்த நோக்கமே ஆட்சியாளர் களாலும், அதிகார வர்க்கத்தாலும் தோற்கடிக்கப்பட்டது.
முடிவுகள் எடுப்பதில்-
டெண்டர்கள் விடுவதில்-
வியாபார யுக்திகள் வகுப்பதில்-
திட்டமிடுதலில் -
இருக்கும் Infra structure களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதில்
-என அனைத்திலும் பின் தங்கினோம்.
நமது "ரெட் டேப்பிஸம்", ஊழல், ஊதாரித்தனம், பொறுப்பின்மை, குளறுபடியான திட்டங்கள் - போன்றவை யாவும் நாம் "போட்டிகள் நிறைந்த சந்தைக் களத்தில்" தோற்பதற்கு காரணமாயிற்று.
அனைத்து மட்டத்திலும் நமது பணிக் கலாச்சாரம் போட்டி நிலவும் சூழ் நிலையினை எதிர் கொள்ள போதுமானதாக இல்லை.
விளைவு...?
BSNL மார்க்கட் ஷேர் (cell phone market) பதினைந்து சதவிகிதத்திற்கு வந்து விட்டது.
MTNL-மார்க்கட் ஷேர் சொல்வதற்கே மிகவும் சங்கடமாக உள்ளது! ஒரு சதத்திற்கும் கீழே!
இப்படியே கையாலாகாதவன் போல புலம்பப் போகிறோமா இல்லை
இல்லை நிலமைகளை திருப்பிப் போட முயற்சிக்கப் போகிறோமா?
காலம் கடந்து போய்விடவில்லை!
முதலில் நம்மால் முடியும் என நம்புவோம்!
150 ஆண்டுகளாக தொலைபேசி சேவை அளித்து வந்த நமக்கு
நேற்று வந்த கம்பெனிகளின் போட்டியினை சமாளிக்கத்தெரியாதா?
வேறு எல்லோரையும் விட நாம் மக்களை நன்கு அறிந்தவர்கள் அல்லவா?
நாம் நமது வல்லமைகளை நம்ப மறுக்கிறோம்.
நம்மாலும் செய்து காட்டமுடியும் என்பதை நம்ப வேண்டும்
மக்கள் இன்னமும் நம்மை விரும்புகிறார்கள்!
நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் :
BSNL - நிர்வாகத்தில் அரசியல் மற்றும் -மேல் மட்ட அதிகாரிகள் குறுக்கீடுகள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும்!
ITS -கள் உள்ளே வரவேண்டும்-இல்லையனில், அவர்கள் மத்திய அரசாங்கத் திற்கே திரும்பப் போய் தங்களது 'திறமை' களை காட்டட்டும்!
CMD -யாக நிபுணத்துவம் மிக்க - மார்க்கட் பொருளாதாரம் தெரிந்த, BSNL -க்கு விசுவாசமான நபரை அமர்த்த வேண்டும்!
தனியார் நிறுவனங்களுக்கு சார்பாக செயல்படும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு களையப்பட வேண்டும்!
அனைத்து நிலையிலான அதிகாரிகளும்-தொழிலாளர்களும் தங்களது பணிக் காலாச்சாரத்தினை, தற்காலத்தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். BSNL- ன் வளர்ச்சி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும்.
அனைத்து நிலையிலான அதிகாரிகளும்-தொழிலாளர்களும் தங்களது பணிக் காலாச்சாரத்தினை, தற்காலத்தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். BSNL- ன் வளர்ச்சி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும்.
BSNL -லிடமிருந்து மத்திய அரசு பெற்ற ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் திரும்ப அளிக்கப்பட வெண்டும். நீக்கப்பட்ட ADC கட்டணங்கள், வெளி நாடுகளுக்கான கால்களின் கட்டனங்கள் BSNL -க்கு பாதகமில்லாத வகையில் முறைப்படுத்தப் படவேண்டும்! நமக்கு கொடுக்கப் படாத 7500 கோடிகளுக்கு நாம் செலுத்தி வரும் 14.5% அநியாய வட்டியினை ரத்து செய்ய வேண்டும்! இந்த கொடுக்கப் படாத கடனை திருப்பிச் செலுத்திவிட்டதாக BSNL சொல்வதை, DOT ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். குறைந்த பட்சமாக இதைச் செய்தாலே நமது நட்டக் கணக்குகள் குறையும்.
காலத்திற்கேற்ற வியாபார தந்திரங்களை அனுசரிக்க வேண்டும்!
அடுத்த 'மே' தினத்தில் நமது "மார்க்கட் ஷேரினை" குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்திக் காட்ட வேண்டும்!
இதற்காக தேவைப்பட்டால் 'போராடவும்' தயாராக வேண்டும்!
இதுவே இந்த "மேதினத்தில்" நாம் மேற்கொள்ளவிருக்கும் சூளுரை!
அனைவருக்கும் நமது மாவட்டச் சங்கத்தின் மேதின வாழ்த்துக்கள்!!
No comments:
Post a Comment