.

Friday, September 16, 2011

NFTE அகில இந்திய சங்கத்தின் தலையங்கம்:


நமது நிறுவனம், 05/09/2011 அன்று வெளியிட்ட மெடிகல் அலவன்ஸ், LTC சம்பந்தமான உத்தரவுகளினால், தொழிலாளர்கள், அதிர்ச்சியும் கோபமும்
அடைந்துள்ளனர். தான் தோன்றித்தனமான, இந்த உத்தரவினை வெளியிடு வதற்கு முன்னால், இது சம்பந்தமாக, தொழிலாளர் தரப்பினை நிர்வாகம் கலந்தோசிக்க வில்லை; குறிப்பாக NFTE –யினை.  இந்த உத்தரவுகள் தொழிலாளர்களிடையே ஏற்படுத்தி யிருக்கும் அதிருப்தி,   நிச்சயம், நிறுவனத்தின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கும். 

நிறுவனம் இந்த வருடம் ரூ.6000  கோடி நட்டம் அடையும் என்பது உண்மைதான்.  ஆனால் இந்த நட்டம் ஒரே நாள் இரவில் வந்து விட்டதா என்ன?

நமது நிறுவனத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், வேலை செய்யா மலிருப்பது, BSNL –க்கு எதிரான அரசாங்கத்தின் கொள்கை கள், நிதிப் பற்றாக் குறையினால் அவதிப்பட்டு, திவால் நிலையில் இருக்கும் நமது நிறுவனத்திற்கு, அரசாங்கம் நமக்கு தர வேண்டிய 2000 கோடி ரூபாயினை இன்னமும் அளிக்காமலிருப்பது ஆகிய  யாவும் தானே காரணம்?   

தொழிலாளர்க்ளுக்கு அளிக்கப்படும் வசதிகளை வெட்டிவிட துடியாய் துடிக்கும் நிர்வாகம், அதிகாரகளுக்கு அளிக்கும், ஊதாரித்தனமான  சலுகைகள் என வரும்போது, கண்களை மூடிக்கொண்டு விடுகின்ற னர்.
JAG நிலை முதாலான அதிகாரிகளுக்கு “பிளாக்பெரி கைபேசிகளை இலவசமாக வழங்குவது, அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாகனங் களை, சுயவேலைகளுக்கு பயன் படுத்திக் கொள்வது போன்றவை களை ஏன் பார்க்க மறுக்கின்றனர்?

சுய லாபத்திற்காக, தீய நோக்கத்துடன், நமது பல அலுவலகங்கள் ‘வாடகை கட்டிடங்களில் செயல்பட வைப்பது ஏன் கண்டுகொள்ளப் படவில்லை? ‘சக அதிகாரிகள் என்பதினாலா?

நமது நிறுவனத்தில் பரந்துபட்டு கிடக்கும் ஊழல் அனைவரும் அறிந்ததுதானே? ஊழல் செய்யும் அதிகாரிகளை,  கட்டுப்படுத்த நமது நிறுவனத்திற்கு தைரியமும் இல்லாமல், மனதும் இல்லாமல், அப்படிப்பட்ட அதிகாரிகள், இலாக்கா சொத்துக்களை  கொள்ளை யடிக்க அனுமதித்துக் கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தையும், மக்களையும் அசைத்துப் பார்த்த ‘அன்னா ஹசாரேயிடம்ருந்து, நிர்வாகம்  ஏதேனும் “பாடங்களை கற்றுக் கொண்டார்களா- இல்லையா?

இப்போதைய கேள்வி, இரண்டரை லட்சம் BSNL  தொழிலாளர்களும் ஒன்றினைந்து போராடி தொலைதொடர்பு இலாக்காவினையும், BSNL நிறுவனத்தையும் சரியான பாதையில் திருப்ப ஏன் முடியவில்லை என்பது தான்.

நிர்வாகமும் அரசும் நமது நிறுவனத்தினை லாபகரமாக நடத்திட உறுதி பூண்டுள்ளதாக்ச் சொல்கிறார்கள். இது சாத்தியமா வேண்டு மானால்,  அதற்கு அனைத்து தொழிலாளர்களும் ஒன்றினைந்து செயலாற்ற தேவையான சூழ் நிலை ஒருவாக்கப் பட வேண்டும்.  
தொழிற்சங்கங்கள் இப்போது ஒற்றுமையைக் கட்டத்தவறினால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.   நாம் விழித்துக் கொள்வதற்கும், ஒற்றுமை கட்டுவதற்கும், செயல் படுவதற்கு மான காலம் வந்து விடட்து.

    இப்போது தவற விட்டோமானால் பின் எப்போதும் இல்லை!.



Print Page

No comments:

Post a Comment