நமது அகில இந்திய தலைவர்கள், விருப்ப ஓய்வு குறித்து 27/09/2011 அன்று நிர்வாகத்தினை
சந்தித்தனர். இந்த கூட்டத்தில் தோழர்கள் சந்தேஷ்வர் சிங், இஸ்லாம், C.K மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சந்தித்தனர். இந்த கூட்டத்தில் தோழர்கள் சந்தேஷ்வர் சிங், இஸ்லாம், C.K மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிர்வாகத்தின் சார்பில் பங்கேற்ற திரு. ஏ.கே கார்க், Director (HRD) அவர்கள், யாரும் வி.ஆர்.எஸ்- திட்ட்த்தின் கீழ், நிறுவனத்தை விட்டு வெளியேறு மாறு கட்டாயப் படுத்தப் பட மாட்டார்கள் எனவும், மத்திய அரசிடமிருந்து இத்திட்டத்திற்காக மதிப்பிடப்படும் செலவுத்தொகையான ரூபாய் 20,000 கோடிகளை, மத்திய அரசு அளித்தால் மட்டுமே, நடைமுறைப் படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக, வங்கிகளிடமிருந்து “கடன் பெறுவது” அல்லது “பங்குவிற்பனை செய்வது” போன்றவற்றில் ஈடுபடாது என உறுதியளித்துள்ளார்.
திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டால், “குஜராத்” முறைப்படியான திட்டம் தான் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment