.

Monday, October 31, 2011

தோழர். N.K. சீனிவாசன்

பெரம்பலூருக்கு அருகில், நாவலூர் என்று
ஒரு கிராமம். அங்கிருந்து ஒரு இளஞன் தொலைபேசித்துறைக்கு பணிக்கு வருகிறார். தொலைபேசி இயக்குனராக கடலூர் கோட்டத்தில் பணியில் சேர்ந்தார். அவர் பணிக்கு வருவதற்கு முன்பே திருமணமும் செய்து கொண்டிருந்தார். 

மற்றெல்லா இளைஞரையும் போலத்தான், ஆரம்பத்தில்  அவரும் இருந்தார். NFTE இயக்கத்தில் இணைந்தார். அதன் பிறகு அவரிடம் சில போராட்டக் குணங்கள் தோன்றின. தோழர் ரகு, அவருக்கு ஞானோபதேசம் செய்வித்தார். அவருடைய வழிகாட்டலில், தனது தனித்துவமான  குணங்களை வெளிப்படுத்தினார்.

அவருக்கு உழைப்பும் போராட்டமும் மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தன. கடலூர் கோட்ட சங்கம், அவருக்கு அடுக்கடுக்காக பணிகளை இட்டது. அனைத்தையும் உற்சாகத்தோடு முழுமையாக நிறைவேற்றிக் கொடுத்தார். அப்போது கடலூர் கோட்டத்தில் NFTE முழு வீச்சில் வளர்ந்து கொண்டிருந்தது.

புதிய உறுப்பினர்களை நமது இயக்கத்திற்கு கொண்டுவருவதில், நம்பற்கரிய பணி யாற்றியவர் இவர். சக ஊழியர்களிடையே மிகவும் 'பாப்புலரானவர்' அந்த தோழர். சக ஊழியர்களுக்கு உதவுவதிலும், அவர்களது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதில் அவருக்கு நிகர் அவரே! அக்காலத்தில் ஒரு இளைஞர் பட்டாளத்திற்கே தலைமையேற்று செயல் பட்டார்.

தொழிற்சங்கத்தில் கிளைச் செயலராக, மாவட்ட செயலராக, உதவி மாநிச் செயலராக, அகில இந்திய துணைச் செயலராக - அனைத்து மட்டங்களிலும், துடிப்பாக பணி யாற்றியுள்ளார். அகில இந்திய துணைச் செலராக பணியாற்றிய பொழுது, தோழர் குப்தாவிற்கும், தோழர் சந்திரசேகருக்கும், உதவுவதற்காக, தில்லிக்குச் சென்று (ஹிந்தி தெரியாத நிலையிலும்) சிறப்பாக பணியாற்றினார்.

சென்னைக்கு மாற்றலில் சென்றபின், ML (சட்டம்) படித்தார். அவரது அனுபவமும், சட்டப் படிப்பும் நமது தோழர்களுக்கு உதவும். 

இவர் நாற்பது ஆண்டு சேவைக்குப்பின்,  இன்று 31/10/2011 பணி ஓய்வு பெறுகிறார்.

அவர் தான் NKS  என அனைவராலும் அன்போடு அழைக்கப்டும் தோழர். N.K. சீனிவாசன்.

தோழர் NKS அவர்களை நமது மாவட்டம் உருவாக்கியது என்பதில் பெருமையடை கிறோம். அவரது பணி ஓய்வுக்காலம் வளமாகவும், அரோக்கியத்துடனும் அமைய NFTE, கடலூர் வாழ்த்துகிறது. 

No comments:

Post a Comment