.

Friday, March 1, 2013

மதுரை மாவட்டச் சங்ககத்திற்கு பதில்





மதுரை மாவட்டச் செயலர் தோழர் முருகேசன் அவர்களுக்கு!

மதுரை மாநாட்டிற்குப் பிறகு, தொடர்ந்து "ஒற்றுமை ஏற்படாதவாறு" சில "ஓய்வு பெற்ற தலைவர்கள்" அமைப்புக்குள் கலகம் விளைவிப்பது சரியில்லை. தலவர்கள், அவரவர்கள் மாவட்டத்தை ஒற்றுமையோடு வைத்துக் கொள்வது ஏப்ரல்-16 தேர்தலுக்கு பலனளிக்கும்.  அதை விடுத்து அண்டை மாவட்டங்களில் ஒற்றுமைக் குலைவு வேலைகளை செய்வது சரியல்ல.  

கடலூர் மாவட்ட மாநாடு மார்ச்-2-ல் நடைபெற உள்ளது.  புதுச்சேரி மாவட்டச் செயலர் காமராஜ், மதுரை மூத்த  தோழர் சேது இருவரும் மாவட்டச் சங்கத்திற்கு எதிராக தனி நபர் ஒருவரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதும்,  மாநாட்டில் போட்டியை உருவாக்குவதும்  எந்த வகை நியாயம்?

மதுரை மாநில மாநாட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட நிதியை ஏற்கனவே வழங்கிவிட்டோம் என்பது தாங்கள் அறிந்ததே! 

உங்கள் வரவேற்புக்குழு வரவு செலவு கணக்கை வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோர மாட்டோம். 

அது எங்கள் வேலையும் இல்லை!

தனி நபர் உரையாடல்களை வெப்சைட் அரசியலாக்க முயற்சிப்பது அநாகரிகம். 

உங்களை வருத்தப்டுத்துவது எங்கள் நோக்கமல்ல!!

No comments:

Post a Comment