.

Thursday, February 28, 2013

Budget - 2013 - Highlights

 புதுடில்லி: இன்றைய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கில் மாற்றம் எதுவுமில்லை என்று நிதியமைச்சர் அறிவித்தார். குறிப்பாக ரூ. 1 கோடிக்கும் மேலாக வருமானம் உள்ளவர்களுக்கு 10 சத வரி விதிக்கப்படுவதாக ‌அறிவித்தார். நேரடி வரியில் எவ்வித மாற்றமுமில்லை என்றார். வரும் நிதி ஆண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 5.3 சதமாக இருக்கும் என பட்ஜெட் உரையை துவக்கி பேசுகையில் குறிப்பிட்டார். ஆண்டு லோக்சபா தேர்தலை, சந்திக்க இருப்பதால் பெரிய அளவில் எதுவும் மாற்றம் கொண்டு வரவில்லை. 

இன்றைய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்ட அறிவிப்புகள் முழு விரம் வருமாறு : 
நகர்ப்புற பஸ் போக்குவரத்துக்கு 14 ஆயிரத்து 800 கோடி

கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ. 80 ஆயிரத்து 196 கோடி 

வேளாண்துறைக்கு 27 ஆயிரத்து 49 கோடி ஒதுக்கீடு

வெளிநாட்டு முதலீட்டு பெருக்க வழி வகை 

சுகாதார மேம்பாட்டுக்கு 37 ஆயிரத்து 300 கோடி 

ஸ்காலர்ஷிப்புக்கு 5 ஆயிரத்து 284 கோடி ஒதுக்கீடு 

பணவீக்கம் கவலை அளிக்கிறது; சிதம்பரம்

மாற்று திறனாளிகள் முன்னேற்றத்திற்கு 110 கோடி ஒதுக்கீடு 

பெண்கள்- குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்கள்

இந்திய பொருளாதாரம் பாதிக்கவில்லை; சிதம்பரம்

சத்து உணவு தயாரிப்புக்கு சலுகைகள் 

உணவு பாதுகாப்புக்கு ஆயிரம் கோடி 

விசாய ஆராய்ச்சிக்கு 53 ஆயிரத்து 87 ஆயிரம் கோடி

தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டுக்கு 7. 5 ஆயிரம் கோடி

சென்னை - பெங்களூரூ தொழிலக நெடுபாதை திட்டம்


பெண்களுக்கென தனி வங்கி துவக்கம்

ராஞ்சியில் உயிரி தொழில்நுட்ப பூங்கா 

காதி விசைத்தறி வளர்ச்சிக்கு 24 ஆயிரம் கோடி

மேற்குவங்கம்- ஆந்திராவில் புதிய துறைமுகம்

காப்பீடு திட்ட மசோதா நிறைவேற்றப்படும்

விசைத்தறி நவீனமயமாக்கப்படும் 

ரெடிமேட் ஆடை பூங்கா துவக்கப்படும்

அனைத்து பொதுத்துறை வங்கிகளி<ம் ஏ.டி.எம்

10 லட்சம் மக்கள் வசிக்கும் இடங்களில் எல்.ஐ.சி.,


50 ஆயிரம் கோடி வரியில்லா கடன் பத்திரம் 

பாதுகாப்பு துறைக்கு ரூ. 2. 3 லட்சம் கோடி

புதிய 839 எம்.எம், சேனல்கள் துவக்க அனுமதி

கால்நடை வளர்ச்சிக்கு 

7 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்க முடிவு

அலிகார் முஸ்லிம் மக்களுக்கு ரூ. 100 கோடி 

அறிவியல் - தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு 6, 245 கோடி

காற்றாலை வளர்சசிக்கு ரூ. 800 கோடி 

இளைஞர் திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

கழிவு பொருட்களில் மின்சாரம் தயாரிக்க திட்டம்

தபால் துறைக்கு 53 கோடி 

கற்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி

வருவாய் பற்றாக்குறை 3. 9 சதமாக இருக்கும்


* வருமான வரியில் மாற்றமில்லை !

50 லட்சத்திற்கு மேல் சொத்து விற்பனையில் 1 சதம் வரி

இளைஞர் மேம்பாட்டுக்கு புதிய திட்டம்

வரி விதிப்பு நிர்வாகம் அமைக்கப்படும்

கலால் மற்றும் சுங்க வரியில் எவ்வித மாற்றமுமில்லை

பங்கு பரிவர்த்தனை வரி குறைப்பு 

ஏற்றுமதியை அதிகரிக்க வரிச்சலுகை

குழந்தைகளுக்கு தேசி நல நிதி

இறக்குமதி செட்டாப் பாக்ஸ் வரி 10 சதம் அதிகரிப்பு

சொகுசு வாகன வரி அதிகரிப்பு

சிகரெட் வரி உயர்வு




வரி விதிப்பு மற்றும் சலுகைகள் :



குறைந்த விலை மொபைல்களுக்கு வரி இல்லை

2 ஆயிரத்திற்கு மேல் மொபைல்களுக்கு 6 சதம் வரி

சிகரெட் வரி 18 சதமாக உயர்வு 

பங்கு பரிவர்த்தனை வரி குறைப்பு 

திரைப்பட துறைக்கு சேவை வரியில் விலக்கு 

மறைமுக வரி மூலம் 4 ஆயிரத்து 700 கோடி 

இறக்குமதி செய்யும் கார்களுக்கு வரி உயர்வு

18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள் விதிப்பு 

ரேடி வரி 13 ஆயிரத்து 300 கோடி 

காலணி வரி குறைப்பு 

தோல் - வெள்ளி வரி உயர்வு 

ரூ 50 ஆயிரம் தங்கம் இறக்குமதி செய்யும் ஆண்களுக்கு சலுகை

ரூ.1 லட்சம் மதிப்பு தங்கம் கொண்டு வரும் பெண்களுக்கு சலுகை 

ரூ. 5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் இருந்தால் 2 ஆயிரம் வரிச்சலுகை

வரி ஏய்ப்போருக்கு மன்னிப்பு திட்டம் அறிவிப்பு

No comments:

Post a Comment