.

Tuesday, March 19, 2013

தோழர் இஸ்லாம்

றாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் துவக்க விழா இன்று (19/03/2013) மதியம் பொது மேலாளர் அலுவலக வாயிலில் துவங்கியது. விழாவில் நமது அகில இந்திய சங்கத் தலைவர் தோழர் இஸ்லாம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் அண்டை மாவட்டத் திலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர் இஸ்லாம் அவர்களது உரையினை நமது ஆசான் தோழர் ரகு அவர்கள் தமக்கே உரித்தான வகையில் சிறப்பாக மொழி பெயர்த்தார். 

விழாவில் SNATTA மாநிலத்தலைவர் தோழர் D. சிவசங்கர்  அவர்களும், PEWA மாவட்ட பொருளாளர் தோழர் சிதம்பரம் மனோகர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. சம்மேளனச் செயலர் தோழர் ஜி. ஜெயராமன் உரையாற்றினார்.

மேலும் இம்மாதத்திய  மாவட்ட சங்க  இதழ் 
"தொலைபேசித் தோழன் " தோழர் ரகு அவர்கள் வழங்கப்பட்டு  தோழர் ரங்கநாதன் அவர்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.



இனி தோழர் இஸ்லாம் உரையிலிருந்து சில பகுதிகள்

முதலில் தோழர்கள் ரங்கனாதன், ரகுநாதன் அவர்களின் ஆசியினைக் கோருகிறேன்.

அறுபது வருட வரலாற்றினையும், செழுமிய அனுபவங்களையும் உள்ளடக்கிய நமது சங்கம், இப்பொழுது ஒரு தீர்ப்பினை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இப்பொழுது இல்லை எனில் பின் எப்பொழுதும் இல்லை என்ற ஒரு நெருக்கடியான சூழலில் உங்களைச் சந்திக்கிறேன். நான் "இப்பொழு இல்லையெனில்.."  என்று கூறுவது நமது நிறுவனத்தை காப்பாற்றுவது பற்றி! 
ஊழியர்களின் எதிர்காலம் பற்றி !

ஒரு தொழிற்சங்கத்திடம் தொழிலாளி எதிர்பார்ப்பது என்ன? குறைந்த பட்சமாக தொழிலாளர்களை, அவர்கள்து ஆசைகளை, கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்பது தானே? ஆனால் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக விளங்கும் நம்பூதிரி சங்கம் யாரின் பிரதிநிதியாக செயலாற்றினார்கள்? சொன்னால் வெட்கம் தோழர்களே! அவர்கள் நிர்வாகத்தின் பிரதி நிதியாக செயலாற்றினார்கள். 

அவர்கள் சொன்னதிற்கும், செய்ததிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை! 

ஓய்வு பெற்றவர்களுக்கும் போனஸ் கொடு என்றார்கள்! பணியில் இருப்பவர்களுக்கே போனஸ் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்தார்கள்.

நம்பூதிரியின் காலத்தில்தான் நாம் பெரும்பாலன சலுகைகளை இழந்தோம். போனஸ் LTC, மருத்துவப்படி மற்றும் இன்னும் பல.....

ஏன் சரியாக ஆடவில்லை என்றால் மேடை கோணலாக இருக்கிறது என்று பதில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது, நம்பூதிரி சங்கத்தில் பதில்கள் எல்லாம்.

அவர்கள் சங்கம் நடத்தத் தெரியாதவர்கள்; கோரிக்கைகளை வடிவமைக்கத் தெரியாதவர்கள்! கோரிக்கைகளை வென்றெடுக்க இயலாதவர்கள்.

ஏன் இப்படி எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம் என வினவினால், அடுத்தமாதம் சம்பளம் வருகிறதா என்று பார் என பதிலுரைக்கிறார்கள்!

இதற்காகவா நாம் இவர்களைத் தேர்ந்தெடுத்தோம்?

இப்பொழுது புதிதாக ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் நாம் கார்பொரேட் (BSNL) ஆனதுதானாம்! கார்பொரேஷன் ஆனதற்கும் கூட NFTE தான் காரணமாம்!

விந்தை! பொய் சொல்வதற்கும்  ஒரு அளவில்லை? நாமா கார்பொரேஷன் 
ஆக வேண்டும் என குதித்தோம்? அதை முடிவெடுத்து திணித்தது அரசாங்கம் அல்லவா? தோழர் குப்தா என்ன செய்தார்? ஒவ்வொருவருக்கும் பணி உத்தரவாதம்,பென்ஷன் உத்தரவாதம் ஆகியவற்றை உறுதி செய்தாரா இல்லையா?  நிறுவனத்தின் பொருளாதார சாத்தியக்கூறு பற்றி தோழர் முழங்காத மேடை உண்டா?

நாம் அங்கீகரிக்கப்படசங்கமாக இருந்த போது, நமது நிறுவனம் இலாபத்தில் இருந்ததா இல்லையா? 

நிறுவனம் வளமாக இருந்தால்தானே நாம் வளமாக இருக்க முடியும்? நிறுவனத்தை கட்டிக் காக்க தோழர் நம்பூதிரியின் திட்டம் என்ன? நிதி நெருக்கடியினைத் தீர்க்க நம்பூதிரி ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா?
அவரிடம் இருக்கும் ஒரே பதில் “எல்லா பழியும் NFTE-யே சேரும் என்பது தான்.

ஆனால்  நம்பூதிரி சங்கத்தினர் பம்மாத்து கோரிக்கைகளை வைப்பதில் கில்லாடிகள். உதாரணமாக  “வாரத்தில் ஐந்து நாள் வேலை! இது பெண்களின் ஓட்டுக்களை கவர்ந்து கொள்வதற்காக! அங்கீகாரத்திற்கு வந்து எட்டு வருடம் ஆயிற்றே? "ஐந்து நாள் வேலை" என்ற கோரிக்கை  என்னவாயிற்று என நாம் கேட்க வேண்டாமா?

இவர்கள்து காலத்தில்தானே 78.2 D.A மெர்ஜர் பிரச்சினை வந்தது? நமது நிறுவனத்தைத் தவிர அனைவரும் இந்த 78.2 D.A மெர்ஜரை பெற்றுவிட்டனரே?.  இதைக் கூட வாங்க முடியாத வக்கற்ற கூட்டம், கொஞ்சமும் வெட்கமின்றி மீண்டும் ஓட்டு கேட்டு வருகின்றனர்.

ஏமாறாதீகள் தோழர்களே!

நாம் அங்கீகரிக்கப் பட்டால், தோழர்களே, நிதி நெருக்கடியிலிருந்து நமது நிறுவனத்தை மீட்க முடியும். 78.2 D.A மெர்ஜர் சாத்தியமாகும். போனஸ் பெற முடியும். இழந்த பல  சலுகைகளை பெற முடியும். NEPP என்பது பரோமோஷன் பாலிஸியா அல்லது பனிஷ்மென்ட் பாலிஸியா என்று புரியவில்லை. பலருக்கு ஊதிய பிடிப்பு நிலவுகிறது. இம்மாதிரியான  பதவி உயர்வு பிரச்சினையில் நிலவும் குளறுபடிகளை நம்மால் நீக்க முடியும்..

ஆகவே தோழர்களே! BSNL நிறுவனத்தை காத்திட, பொருளாதார ரீதியில் நிறுவனத்தை நிலை நிறுத்திட, ஊழியர்களின்-குறிப்பாக குரூப் CCccசி , மற்றும் D ஊழியர்களின் நலன் காத்திட, S.C / S.T ஊழியர்களின் நலன் காத்திட NFTE சங்கத்தினை தேர்ந்தெடுங்கள். வார்த்தை ஜாலத்தினையே துணையாகக் கொண்டு , நிர்வாகத்தின் பிரதி நிதியாக மட்டுமே விளங்கும் நம்பூதிரி சங்கத்தினை வீட்டிற்கு அனுப்புங்கள்.

1 comment: