நமது அருமைத்
தோழர் P. சுந்தரமூர்த்தி (சென்ற மாவட்டச் செயலாளர்)
அவர்களது தந்தையார் இன்று (07-03-2013) காலை, புதுவை ஜிப்மர் மருத்துவ மணையில்
காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு நமது இயக்கத்தின் அஞ்சலியினை
உரித்தாக்குகிறோம். தோழர்
சந்தரமூர்த்திக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும்,
ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதிச் சடங்குகள்
‘ஆடுதுறை' கிராமத்தில் (திட்டக்குடி அருகில்) ’ இன்று மாலை நான்கு மணியளவில் நடைபெறும்.
தோழர் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினையும், மறைந்த அவரது தந்தையாருக்கு அஞ்சலியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நெல்லையில் இருப்பதினால் நேரில் வர இயலவில்லை.
ReplyDeleteபட்டாபி (மாநிலச் செயலர்)
தோழர் சுந்தரமூர்த்தியின் தந்தை திரு. பிச்சைப்பிள்ளை அவர்களது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நோக்கத்தோடு, ஆடுதுரை கிராமத்திற்கு சென்றிருந்தேன். மருத்துவ மனையில் இன்னமும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும், தோழர் சுந்தரமூர்த்தியின் தாயாருக்கு, அவரது கணவர் மறைந்த செய்தி தெரிவிக்கப் படவில்லை என்பது கல்மனதையும் உருக்க வைக்கும் செய்தி. தோழரின் சகோதரர்கள், சகோதரி மற்றும் இரு சிறுவர்கள் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய மிகக் கடுமையான நெருக்கடி நிலையிலும் அறிவித்தபடி மாவட்ட மாநாட்டினை நடத்தினார் தோழர் சுந்தரமூர்த்தி. சங்க உணர்வுக்கும், கடமை உணர்வுக்கு இலக்கணம் என்று ஏதாவது இருக்குமென்றால் அது இது தான்.
ReplyDeleteபாராட்டிற்குரிய இப்பொறுப்புணர்ச்சி, எனக்கு பழைய நிகழ்ச்சி ஒன்றினை நினைவு படுத்துகிறது. 1967. சேலம் டிரங்க் எக்சேஞ்சினை பெண்கள் மயமாக்குவது என்ற முடிவினை எதிர்த்து சேலம் கிளை போராடிக் கொண்டிருந்தது. போராட்டத்தினை தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார் தோழர் சேலம் மாலி.
மிகக் கடுமையான போராட்டம். மாநிலசங்கம் அங்கேயே முகாமிட்டிருந்தது. தோழர்கள் ஜெகன், சிரில், மஜீத், பீட்டர், கணேசன் போன்றோர் போராட்ட களத்தில் இருக்கின்றனர். எந்தவிதமான முன் அறிவிப்பின்றி பணியிலிருந்து வெளி நடப்பு (Quit Work) செய்யும் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தோம். ஒருவகையான கொரில்லா யுத்த முறை அது.
போராட்டம் துவங்கிய அன்றே தோழர் மாலி அவர்களது தந்தை, காரைக்கால் அருகே காலமான செய்தி வந்தது. போராட்டத்தை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் மாலிக்கு நெருக்கடி. போராட்ட களத்தினை விட்டு விலகவும் முடியாது! தலைமகன் என்ற முறையில் செய்ய வேண்டிய சடங்குகளயும் செய்யாமலிருக்க முடியாது! உறவு,பாசம் யாவற்றையும் விட சங்கக் கடமையினையே தேர்நதெடுத்தார் தோழர் மாலி. இரவோடு இரவாக ஊருக்குச் சென்று ஈமச் சடங்குகள முடித்து விட்டு, போராட்ட களத்திற்கு திரும்பினார். போராட்டம் வெற்றிகரமாக முடிந்தபின் தான் ஊருக்குச் சென்று மற்ற சடங்குகளைச் செய்தார்.
மாலியின் சங்கப் பற்றும், கடமையுணர்வும் நமது சங்க தியாக வரலாற்றில் ஒளிவீசுகின்றன. தியாகங்கள் மறக்கப் படுவதில்லை! வீண் போவதுமில்லை.
அந்த வரிசையில் இதோ புடம் போட்ட தங்கமாக மின்னுகிறார் தோழர் சுந்தர மூர்த்தி, அவருக்கு நான் தலை வணங்குகிறேன்
-ரகு